பாக்., பெண் ஏஜென்ட் வலையில் சிக்கிய ராணுவ வீரர்கள்

Updated : நவ 07, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: நம் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் பெண் ஏஜென்டுக்கு தகவல் கொடுத்த, இரண்டு ராணுவ வீரர்கள், ராஜஸ்தாவில் கைது செய்யப்பட்டனர்.ராஜஸ்தானில், உள்ள பொக்ரானில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள், ரவி வர்மா, விசித்ர போஹ்ரா. இவர்கள் இருவரும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலம், நம் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி,
Pakistan,பாகிஸ்தான்,Indian army,Honey-trapped,soldiers,arrested,Rajasthan

ஜெய்ப்பூர்: நம் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் பெண் ஏஜென்டுக்கு தகவல் கொடுத்த, இரண்டு ராணுவ வீரர்கள், ராஜஸ்தாவில் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானில், உள்ள பொக்ரானில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள், ரவி வர்மா, விசித்ர போஹ்ரா. இவர்கள் இருவரும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலம், நம் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,க்கு தகவல் கொடுப்பதாக புகார்கள் வந்தன. இது பற்றி, ராணுவ அதிகாரிகள், ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள், ஐ.எஸ்.ஐ.,யைச் சேர்ந்த பெண் ஏஜென்ட் ஒருவருக்கு, தகவல்கள் அனுப்பியது உறுதியானது. இதற்கிடையில், இரண்டு வீரர்களும், சொந்த ஊருக்கு, செல்லும் போது, ஜோத்பூர் ரயில் நிலையத்தில் வைத்து, உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


latest tamil news



அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின், உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இரு ராணுவ வீரர்களையும், 'இன்டர்நெட்' குரல் அழைப்பு வழியாக, ஐ.எஸ்.ஐ.,யின் பெண் ஏஜென்ட் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் பேசிய விதம், பஞ்சாப் மக்கள் பேசுவது போல இருந்ததால், அவர் இந்தியர் என, இருவரும் நம்பினர். அவருடைய வலையில் சிக்கிய இருவரும், ராணுவம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர். பிடிபட்ட வீரர்களை, ஜெய்ப்பூருக்கு கொண்டு சென்று, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09-நவ-201913:05:59 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி முதலில் அந்த .... விட்டு மேற்கொண்டு விசாரணையை தொடங்கலாம் என்பது ஏன் உறுதியான கருத்து.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-நவ-201917:21:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவனெல்லாம் இந்தமாதிரி பொண்னுகளோ அவனுகளுக்கு சம்பளம் தராமல் சிறையிலே தள்ளவேண்டும்
Rate this:
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
08-நவ-201912:52:04 IST Report Abuse
S.V.SRINIVASAN ராணுவ வீரர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை குடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X