பயனடைவது யார்?| Dinamalar

பயனடைவது யார்?

Added : நவ 07, 2019 | கருத்துகள் (3)
Share
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று, அங்கு, 'ஹவ்டி மோடி' என்ற கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், அமெரிக்கா சென்று பணிபுரிய விரும்பும் இந்தியர்களின், ஹெச்1பி விசாவை, அந்நாட்டு அரசு, அதிக எண்ணிக்கையில் நிராகரிக்க துவங்கியுள்ளன. இந்த ஆட்சியில், உண்மையில் பயன் அடைந்து கொண்டிருப்பது யார் என்ற கேள்வியை, பா.ஜ., அரசிடம் அனைவரும் கேட்க வேண்டும்.- பிரியங்கா, பொது செயலர்,
பயனடைவது யார்?

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று, அங்கு, 'ஹவ்டி மோடி' என்ற கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், அமெரிக்கா சென்று பணிபுரிய விரும்பும் இந்தியர்களின், ஹெச்1பி விசாவை, அந்நாட்டு அரசு, அதிக எண்ணிக்கையில் நிராகரிக்க துவங்கியுள்ளன. இந்த ஆட்சியில், உண்மையில் பயன் அடைந்து கொண்டிருப்பது யார் என்ற கேள்வியை, பா.ஜ., அரசிடம் அனைவரும் கேட்க வேண்டும்.
- பிரியங்கா, பொது செயலர், காங்.,


தீர்ப்பை ஏற்போம்!


அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளிக்கவுள்ள தீர்ப்பை, அனைத்து மக்களும் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தீர்ப்பு எப்படி இருந்தாலும், மக்களின் பாதுகாப்புக்கும், உடைமைகளுக்கும், மத உணர்வுகளுக்கும், தகுந்த பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிக்க வேண்டிய பொறுப்பு, மத்திய, மாநில அரசு களுக்கு உள்ளது. அவர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படாமல், பாதுகாக்கப்பட வேண்டும்.
-மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்கட்சி.


திரிசூலம் எனும் ஆயுதம்!


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரிடம், திரிசூலம் என்ற, சக்தி வாய்ந்த ஆயுதம் உள்ளது. அதில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை என்ற மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அதை பயன்படுத்தி, எதிரிகளை அழிக்கின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை, அரசியல் ஆயுதமாக, அமித் ஷா பயன்படுத்து கிறார். இதன் மூலம், மத ரீதியாக நாட்டை துண்டாடும் பணியில் அவர் இறங்கி உள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ்ராஜ்யசபா எம்.பி., - காங்.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X