பொது செய்தி

இந்தியா

8 அடி உயரமுள்ள கிரிக்கெட் ரசிகர் தங்குவதற்கு இடமின்றி தவிப்பு

Added : நவ 07, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 8 அடி உயரமுள்ள கிரிக்கெட் ரசிகர் தங்குவதற்கு இடமின்றி தவிப்பு

லக்னோ: ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 8 அடி உயரமுள்ள தீவிர கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தங்குவதற்கு தகுந்த ஓட்டல்கள் கிடைக்காததால், தவிப்புக்கு ஆளாகிஉள்ளார்.

ஆசிய நாடான ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர், நம் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிகளை பார்ப்பதற்காக, ஆப்கனை சேர்ந்த, ஷெர் கான் என்ற தீவிர கிரிக்கெட் ரசிகர், சமீபத்தில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்தார். இவரது உயரம், 8 அடி, 2 அங்குலம். இவர், தங்குவதற்காக லக்னோவில் உள்ள பல ஓட்டல்களுக்கு சென்றார்.

ஆனால், அவரது உயரம், சராசரி மனிதர்களின் உயரத்தை விட மிக அதிகமாக இருந்ததால், பிரச்னைகள் ஏற்படும் என கருதி, ஓட்டல் நிர்வாகங்கள், இவருக்கு அறை ஒதுக்க மறுத்து விட்டன. போலீஸ் உதவிபல ஓட்டல்களுக்கு அலைந்து திரிந்தும் இடம் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, போலீசார் உதவியை நாடினார்.

இதையடுத்து, லக்னோ வில் உள்ள ராஜ்தானி என்ற ஓட்டலில், இவர் தங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்டது. இவரை பார்ப்பதற்காக, ஏராளமான மக்கள், ஓட்டல் முன் குவிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த ஓட்டல் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பணிகள் பாதிப்புஓட்டல் உரிமையாளர் கூறியதாவது:ஷெர் கானை பார்ப்பதற்காக, எந்த நேரமும், ஓட்டல் முன், 200 பேர் திரள்கின்றனர். இதனால், எங்கள் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. அவரை அறையை காலி செய்ய வைக்கலாமா என, யோசித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இன்னும் ஐந்து நாட்களுக்கு, லக்னோவில் தங்கியிருக்க, ஷெர் கான் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவர் தங்குவதற்கு ராஜ்தானி ஓட்டல் நிர்வாகம் தொடர்ந்து அனுமதி அளிக்குமா அல் லது மறுக்குமா என்பது, விரைவில் தெரிய வரும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-நவ-201910:38:10 IST Report Abuse
Natarajan Ramanathan தசாவதாரம் கமல் மாதிரி இருக்கான்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-நவ-201910:35:50 IST Report Abuse
Natarajan Ramanathan ஸ்டேடியத்திலேயே போய் படுத்துக்கொள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X