ஐதராபாத்: ஆந்திர முதல்வரான, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பொருத்துவதற்காக, 73 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பெயர் மாற்றம்
இந்தாண்டு மே மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார். அவருக்கு முந்தைய முதல்வரான, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பெயர்களை மாற்றினார். அந்த திட்டங்களுக்கு தன்னுடைய தந்தையும், முன்னாள் முதல்வருமான மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் பெயர்களை சூட்டி, ஜெகன்மோகன் ரெட்டி பலருடைய அதிருப்திக்கு ஆளானார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது, எட்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மாநாட்டு அரங்கை, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி இடித்து தள்ளினார்.இந்நிலையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு, 73 லட்சம் ரூபாய் செலவில், புதிய கதவுகள் மற்றும் ஜன்னல்களை, ஜெகன்மோகன் ரெட்டி பொருத்திஉள்ளார். இதற்கு, சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
குண்டூரில் தன் சொந்த கிராமமான தடேபள்ளியில் சாலைகள் அமைக்க, 5 கோடி ரூபாயை முதல்வர் ஜெகன்மோகன் செலவிட்டுள்ளார். அவருடைய வீட்டில், மின்சார பணிகளுக்காக மட்டும், 3.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.தொடர்ந்து சர்ச்சைஇதைத் தவிர, 1.89 கோடி ரூபாய் செலவில், ஹெலிபேட் அமைக்கப்பட்டது. மக்களை சந்திக்க, 82 லட்சம் ரூபாயில் புதிய கட்டடம் என, ஜெகன் மோகன், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில், ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு, லட்சக்கணக்கில் பணம் செலவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE