தாசில்தார் கொல்லப்பட்டதன் எதிரொலி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாசில்தார் கொல்லப்பட்டதன் எதிரொலி

Added : நவ 07, 2019 | கருத்துகள் (3)
 தாசில்தார் கொல்லப்பட்டதன் எதிரொலி

கர்னுால்: தெலுங்கானாவில், அரசு அலுவலகத்திலேயே, பெண் தாசில்தார் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, ஆந்திராவில், கயிற்றால் தடுப்பு கட்டி, மக்களை சந்தித்து வருகிறார், மற்றொரு பெண் தாசில்தார்.தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லாபுர்மெட் பகுதி தாசில்தாராக பணியாற்றியவர், விஜயா ரெட்டி. கடந்த, 4ம் தேதி, தாசில்தார் அலுவவலகத்தில், விஜயா ரெட்டி பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சுரேஷ் என்பவர், விஜயா ரெட்டி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி, தீ வைத்தார். தீயில் கருகி விஜயா இறந்தார்; அவரை காப்பாற்ற முயன்ற, அவரது டிரைவரும் தீயில் கருகி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.தீ வைத்த போது காயமடைந்த சுரேஷ், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இந்த சம்பவம், தெலுங்கானாவில் மட்டுமின்றி, ஆந்திராவிலும், அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமை யிலான, ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சி நடக்கும், ஆந்திர மாநிலம், கர்னுாலில் தாசில்தாராக பணியாற்றும் உமா மகேஸ்வரி, அலுவலகத்தில் தன் இருக்கைக்கு, இரண்டு அடி முன், கயிற்றால் தடுப்பு ஒன்றை கட்டியுள்ளார். அதன் பின்னிருந்து தான், அவர் மக்களை சந்திக்கிறார்; அவர்களிடமிருந்து மனுக்கள், ஆவணங்களை பெற்றுக் கொள்கிறார். இது பற்றி உமா மகேஸ்வரி கூறுகையில், ''தெலுங்கானாவில், தாசில்தார் விஜயா ரெட்டி கொலை செய்யப்பட்டது, எனக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ''அலுவலகத்துக்கு நேற்று வந்த சிலர், குடிபோதையில் வந்தனர். அவர்களைப் பார்த்ததும், எனக்கு அச்சம் ஏற்பட்டது. அதனால்தான், கயிறு கட்டி, தடுப்பு ஏற்படுத்தியுள்ளேன்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X