பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு நிதியுதவிக்கு கட்டுமான துறை வரவேற்பு

Added : நவ 07, 2019
Advertisement

'ரியல் எஸ்டேட்' துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு வழங்க முன்வந்துள்ள நிதி உதவியால், தமிழகத்தில், 20 ஆயிரம் வீடுகள் அடங்கிய, 100 திட்டங்கள் மீண்டும் உயிர் பெறும் என, தெரிய வந்துள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதி கிடைக்காமல், பாதியில் நின்று போன கட்டுமான திட்டங்களுக்கு கடன் வழங்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன் வாயிலாக, நாடு முழுவதும், 1,600 திட்டங்களில் முடங்கியுள்ள, 4.58 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள், மீண்டும் துவங்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.பாதியில் முடங்கிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, அவற்றில், மக்கள் வீடு வாங்க முன்வருவர். இதன் வாயிலாக, ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் அதிகரிக்கும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் என்ற அடிப்படையில், டில்லி, மும்பை நகரங்களில் முடங்கியுள்ள பெரும்பாலான திட்டங்கள் பயன் பெறும். தமிழகத்தில், 20 ஆயிரம் வீடுகள் அடங்கிய, 100 கட்டுமான திட்டங்கள், இதில் பயன் பெறும் என, தெரிய வந்துள்ளது.புத்துயிர் பெறும்இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின், தென்னக மைய தலைவர் எஸ்.ராமபிரபு கூறியதாவது:பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு, வங்கிகள், ஏற்கனவே தர ஒப்புக்கொண்ட கடன்கள் கிடைப்பது, பாதியில் தடைபட்டது. அதனால், கட்டுமான பணிகளும் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் முடங்கியது. தற்போது, மத்திய அரசு எடுத்துள்ள முடிவால், தமிழகத்தில் பாதியில் பணிகள் நிறுத்தப்பட்ட, 20 ஆயிரம் வீடுகளுக்கு, புத்துயிர் கிடைக்கும்.இத்திட்டங்களில் விற்காமல் உள்ள வீடுகள் விற்கப்படும். கட்டுமான துறை சார்ந்த பிற துறைகளிலும், வர்த்தகம் சூடுபிடிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வரவேற்பு
தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:பாதியில் நின்ற திட்டங்களுக்கு, நிதி உதவி வழங்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இதனால், நின்றுபோன கட்டுமான பணிகள், மீண்டும் துவக்கப்படும்.இத்திட்டங்களில் வீடுகள் விற்கப்படுவதால், பொருளாதாரம் மேம்படும். இதில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதிலும், வீடு விற்பனையிலும், ஜி.எஸ்.டி., வரி தொடர்பான பிரச்னைகள், இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.இப்பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு முன்வர வேண்டும். வரி விதிப்பு கோணத்தில் ஆராய்ந்தால், இதற்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பதிவு அவசியம்
மத்திய அரசு முடிவின்படி, கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி பெற, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்திருப்பது கட்டாயம். இதனால், ரியல் எஸ்டேட் சட்டத்தில் விலக்கு பெற முயன்ற பல நிறுவனங்கள், அதற்கான ஆணையத்தில் பதிவு செய்ய, இனி ஆர்வம் காட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X