இலவசங்களை கொடுத்து கெடுத்து விட்டனர்: பிறந்த நாள் விழாவில் கமல் ஆதங்கம்

Updated : நவ 07, 2019 | Added : நவ 07, 2019 | |
Advertisement
பரமக்குடி: ''தமிழகத்தில் இலவசங்களை கொடுத்து, மக்களை கெடுத்து விட்டனர்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேசினார்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நேற்று, 65வது பிறந்த நாளை, கமல் கொண்டாடினார். சுதந்திரப் போராட்ட வீரரும், அவரது தந்தையுமான சீனிவாசன் சிலை திறப்பு விழா, திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா நடந்தது; கமல் குடும்பத்தினர் பங்கேற்றனர்.கமல் பேசியதாவது:
 இலவசங்களை கொடுத்து கெடுத்து விட்டனர்:  பிறந்த நாள் விழாவில் கமல் ஆதங்கம்

பரமக்குடி: ''தமிழகத்தில் இலவசங்களை கொடுத்து, மக்களை கெடுத்து விட்டனர்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேசினார்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நேற்று, 65வது பிறந்த நாளை, கமல் கொண்டாடினார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், அவரது தந்தையுமான சீனிவாசன் சிலை திறப்பு விழா, திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா நடந்தது; கமல் குடும்பத்தினர் பங்கேற்றனர்.கமல் பேசியதாவது: என் தந்தையிடம் சிலர், 'ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டிய பையனை, கலைஞனாக மாற்ற நினைக்கிறீர்களே' என்றனர்.'முதலில் கலைஞனாகட்டும்; பின், ஐ.ஏ.எஸ்., ஆகலாம்' என்பார். சொல்லத்தான் நினைக்கிறேன் படப்பிடிப்பு நடந்த போது, 'மாலை நேர கல்லுாரியில் படித்து, ஐ.ஏ.எஸ்., ஆகிவிடு' என்றார்.'பாலச்சந்தர் ஒரு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அந்த வழியில் நான் செல்கிறேன். படிப்பெல்லாம் நமக்கு வராது' என்றேன். 'சங்கீதமாவது கற்றுக்கொள்' என்றார். என் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் விருப்பம் இல்லை. 'அரசியலுக்கு வர வேண்டும்' என, தந்தை மட்டும் தொடர்ந்து சொல்லி வந்தார். அப்போது உதாசீனப்படுத்தினோம். 'எங்கள் காலத்தில், சுதந்திரப் போராட்டம் நடந்தது.

அதனால், அரசியல் தேவைப்பட்டது. அப்படி ஒரு போராட்டம் வந்தால் என்ன செய்வாய்?' என்றார். இன்று அப்படி ஒரு நிலை ஏற்பட்டதால்,அரசியலுக்கு வந்து உள்ளேன். தமிழகத்தில் இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்து விட்டனர். அதை நான் தடுத்தால், 'கிடைப்பதை தடுக்கிறானே' என, மக்கள் கோபப்படுவர்.ராணுவத்திற்கு பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் பெண்கள் உள்ளனர். ராணுவத்தில் போர் செய்து இறந்தவர்களை விட, விபத்தில் இறப்பவர்கள், நுாறு மடங்கு அதிகம்.

இந்த வேலையைத் தான் செய்வேன் என, அடம் பிடிக்க கூடாது. என், 5 வயதில், என் அண்ணி, என் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில், பாரீசில் கொண்டாடிய போது கிடைக்காத மகிழ்ச்சி, இந்த விழாவில் கிடைத்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
என்னை விட சீனியர்:
சாருஹாசன் பெருமிதம்கமல் தந்தை சிலை திறப்பு விழாவில், அவரது அண்ணன் சாருஹாசன் பேசியதாவது:அரசியலும், சினிமாவும் மக்கள் தொண்டு. அப்படித் தான் கமலை தயார் செய்தார் தந்தை. திரைத் துறையில் என்னை விட, 20 வயது மூத்தவர் கமல்.

 நடிகர் பிரபு: 5 வயதில் சினிமாவுக்கு வந்தவர் கமல். 'எனது திரை உலக வாரிசு கமல் தான். தொழில்நுட்பத்தில் என் தோளில் முட்டி போட்டு, அண்ணாந்து பார்க்கிறான்' என்றார், என் தந்தை சிவாஜி.

 நடிகை சுஹாசினி: நீங்கள் இல்லை என்றால், சினிமாவில் நான் இல்லை. நடனம், நடிப்பு இல்லாமல், தொழில்நுட்ப பணிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என, திரைப்படக் கல்லுாரி கட்டணத்தையும் அவர் கட்டினார். கணவர் மணிரத்னம் கிடைத்ததும் அவரால் தான். நடிகை ஸ்ருதி: பல ஆண்டுகளுக்கு பின், பரமக்குடிக்கு வந்துள்ளேன். என் அப்பாவின் பெற்றோர் இருந்தால், இப்போது பெருமைப்படுவர். அதே பெருமையை நாங்கள், ஒருநாள் உங்களுக்கு தருவோம். இவ்வாறு, அவர்கள் பேசினர்.

 கமலை சிறு வயதில் துாக்கி வளர்த்த ராமசாமி என்பவரை மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்தினர்.

 கமல் தந்தை சிலையை வெளியே திறப்பதாக இருந்தது. போலீசார் அனுமதிக்காததால், திறன் மேம்பாட்டு மைய கட்டட வளாகத்தில் திறக்கப்பட்டது.

 சீனிவாசன், பரமக்குடி நீதிமன்றத்தில் பணியாற்றியதால், அவரது படம், பார் கவுன்சில் அலுவலகத்தில் திறக்க திட்டமிடப்பட்டது. ஒரு சில வக்கீல்கள், 'அரசியல் கட்சி களை அனுமதிக்க கூடாது' என தெரிவித்ததால், படம் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 சீனிவாசன் சிலையை வேன்ஸ் என்பவர் தான் வடிவமைத்தார். அவரை மேடையில் கவுரவப்படுத்தி,இந்தியன் - 2 படத்தில், கமல் முகத்தை வடிவமைத்தவர் என்ற தகவல்தெரிவிக்கப்பட்டது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X