மக்களுக்கு நீதி: மஹாராஷ்டிரா முதலிடம்| Dinamalar

மக்களுக்கு நீதி: மஹாராஷ்டிரா முதலிடம்

Added : நவ 07, 2019 | |
புதுடில்லி: நாட்டிலேயே, நீதிமன்றம், போலீஸ், சட்ட உதவி போன்றவற்றில், மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கச் செய்வதில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்திய நீதி அறிக்கை என்ற தலைப்பில், நாடு முழுவதும் ஆய்வு நடத்தி, புள்ளி விபரங்களை சேகரித்து, ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், நீதிமன்றம், போலீஸ், சட்ட உதவி ஆகியவற்றில்,

புதுடில்லி: நாட்டிலேயே, நீதிமன்றம், போலீஸ், சட்ட உதவி போன்றவற்றில், மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கச் செய்வதில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்திய நீதி அறிக்கை என்ற தலைப்பில், நாடு முழுவதும் ஆய்வு நடத்தி, புள்ளி விபரங்களை சேகரித்து, ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், நீதிமன்றம், போலீஸ், சட்ட உதவி ஆகியவற்றில், மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்வதில், சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மஹாராஷ்டிரா, முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கேரளாவும், மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளன. பஞ்சாப், ஹரியான மாநிலங்கள், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X