சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி குழந்தைகள் கொலை வழக்கு குற்றவாளிக்கு துாக்கு தண்டனை உறுதி

Added : நவ 07, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 பள்ளி குழந்தைகள் கொலை வழக்கு குற்றவாளிக்கு துாக்கு தண்டனை உறுதி

கோவை: கோவையில், பள்ளி குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம், 'டிஸ்மிஸ்' செய்தது. இதையடுத்து, துாக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

கோவை, ரங்கே கவுடர் வீதியில் வசித்து வரும் ஜவுளி வர்த்தகரின், 10 வயது மகளும், 7 வயது மகனும், காந்திபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடத்தல்இவர்களை, கோவை யை சேர்ந்த, 'கால் டாக்சி' டிரைவர் மோகனகிருஷ்ணன், 27, தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார்.கடந்த, 2010, அக்., 29ல், இருவரையும் கால் டாக்சியில் அழைத்துச் சென்ற மோகனகிருஷ்ணன், அவர்களை, பொள்ளாச்சிக்கு கடத்தினார். செல்லும் வழியில், பொள்ளாச்சியை சேர்ந்த, அவரது நண்பன், மனோகரனை, 27, காரில் ஏற்றிக்கொண்டார்.இருவரும், குழந்தைகளை, ஆட்கள் நடமாட்டம் இல்லாத மலைப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிறுவனை கட்டி போட்டு விட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தனர். மயக்கத்தில் துடித்த இருவரையும் உடுமலை அருகேயுள்ள வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தனர்.தப்பிக்க முயற்சிபோலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இருவரையும் கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் இருந்து, இருவரையும், 'கஸ்டடி' எடுத்த போலீசார், 2010, நவ., 9ல், சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றபோது, மோகன கிருஷ்ணன், போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார். அப்போது, 'என்கவுன்டரில்' மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டார். மனோகரன் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. கடந்த, 2012, நவ., 1ல், குற்றம்சாட்டப்பட்ட மனோகரனுக்கு, கூட்டுச்சதி, கடத்தல், கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தல், கொடூரமாக கொலை செய்தல், சாட்சி ஆவணங்களை மறைத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளில், துாக்கு தண்டனை மற்றும் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

துாக்கு தண்டனையை எதிர்த்து, 2012ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2014, மார்ச், 24ல், தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.அவகாசம்இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை, பாலி நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூர்யகாந்த் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, துாக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.அதை தொடர்ந்து, மனோகரன் தரப்பில் ஆஜரான, டில்லி, இலவச சட்ட உதவி மைய வக்கீல்கள், உச்ச நீதிமன்றத்தின் அதே அமர்வில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், மனோகரனுக்கு அளிக்கப்பட்ட துாக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து இருந்தனர். அரசு தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிபதிகள், மறு சீராய்வு மனுவை, நேற்று, 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டனர்.

துாக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, ஜனாதிபதிக்கு, மனோகரன் சார்பில், கருணை மனு அளிக்க அவகாசம் அளிக்கப்படும். கருணை மனு நிராகரிக்கப்பட்டால், இறுதியாக துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.கடலுார் சிறைக்கு மாற்றம் ஏன்?துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட மனோகரன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, இவரை வழக்கு விசாரணைக்காக, கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் பெண் போலீஸ் ஒருவருக்கு, 'லவ் டார்ச்சர்' அளித்து வந்தார். பெண் போலீசிடம், 'நான் உங்களை காதலிக்கிறேன்' என கூறி, கைகளில் காயம் ஏற்படுத்தி கொண்டார். இந்த, 'டார்ச்சர்' தாங்க முடியாமல், உயர் அதிகாரிகளிடம் பெண் போலீஸ் புகார் அளித்தார். இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், மனோகரன் கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-நவ-201909:34:09 IST Report Abuse
Girija இவனை அமில தொட்டியில் போட்டு தான் கொல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X