அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாண்டியராஜன் தரம்: ஸ்டாலின் தாக்கு

Updated : நவ 08, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement
சென்னை: 'அமைச்சர் பாண்டியராஜன் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் மக்களுக்கு காட்டிவிட்டது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்து விட்டு, நாலாந்தர பேச்சாளரை போல, அமைச்சர் பாண்டியராஜன் பேசியிருப்பது, எனக்கு வருத்தம் தரவில்லை. இது போன்ற எத்தனையோ ஏசல்களையும், அவமானங்களையும்
பாண்டியராஜன் தரம்: ஸ்டாலின் தாக்கு

சென்னை: 'அமைச்சர் பாண்டியராஜன் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் மக்களுக்கு காட்டிவிட்டது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்து விட்டு, நாலாந்தர பேச்சாளரை போல, அமைச்சர் பாண்டியராஜன் பேசியிருப்பது, எனக்கு வருத்தம் தரவில்லை. இது போன்ற எத்தனையோ ஏசல்களையும், அவமானங்களையும் சுமந்து தான், தி.மு.க., இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்த அவமானங்கள், வேரில் வெந்நீர் ஊற்றுவதற்காக செய்யப்படுகின்றன. அதை, நன்னீராக்கி, மேலும் வளர்ந்து, படரும் சக்தி படைத்தது, தி.மு.க.,

எனவே, பாண்டியராஜனுக்கு எதிராக நடத்தி வரும் எதிர்ப்பு போராட்டங்களை, தி.மு.க.,வினர் தவிர்க்க வேண்டும். அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும், மக்களுக்கு தோலுரித்து காட்டிவிட்டது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
11-நவ-201914:54:28 IST Report Abuse
suresh kumar கண்டிஷன் போட்டு கடவுளை நம்பாதீர்கள். நடப்பது அனைத்தும் கடவுளால்தான், கடவுள் விரும்பியபடிதான்.
Rate this:
Cancel
S.R.Arul - Chennai,இந்தியா
10-நவ-201912:06:09 IST Report Abuse
S.R.Arul Thanks to Mr Panidarajan to share your past. The raised question was directly ask to you Mr Sudalai.. why are you representing DMK for this issue??
Rate this:
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
09-நவ-201901:55:04 IST Report Abuse
sankar ஊர் மேல மேய்வாளாம்.... சொன்னால் அழுவாளாம் .... என்பது கிராமத்து சொல்வாடை.... இது எதற்கு பொருந்துமோ ???? சுடலை உனக்கு ???? ஐய்யோ இவனுக்கு படிக்கவும் தெரியாதே .... எவனாவது படித்து சொல்லுங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X