கோர்ட் செய்தி

தமிழ்நாடு

காவல் துறையினருக்கும், மருத்துவருக்கும் அதிக ஊதியம்! சென்னை உயர் நீதிமன்றம் சிபாரிசு

Updated : நவ 07, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement
டாக்டர்கள்,காவல் துறை, மருத்துவர், போலீசார், அதிக ஊதியம், சென்னை, உயர் நீதிமன்றம், சிபாரிசு

சென்னை: கல்லுாரி ஆசிரியர்களின் சம்பளத்துடன் டாக்டர்கள் சம்பளத்தை ஒப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம் 'டாக்டர்கள், போலீசாருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்' என சிபாரிசு செய்துள்ளது.

தமிழக மருத்துவ கல்லுாரிகளில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாததால் காலியான 207 இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப கவுன்சிலிங் நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விதிமுறைப்படி எழுத்து தேர்வு எழுதி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனரா என்பதை சரிபார்க்க வேண்டியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரின் பெருவிரல் ரேகை பதிவை சி.பி.சி.ஐ.டி.க்கு தேசிய தேர்வு முகமை அனுப்ப வேண்டும்.

மற்ற மாநிலங்களில் ஆள்மாறாட்டம் அல்லது வேறு முறைகேடுகள் வழியாக மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்தனரா; அதுகுறித்த புகார் ஏதும் வந்ததா என்பதை சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் போத்திராஜ் ஆஜராகி ''16 மாணவர்கள் விரல் ரேகை வழங்கவில்லை. அவர்கள் 8ம் தேதிக்குள் வழங்குவர்'' என்றார்.

சி.பி.ஐ. வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி ''சென்னையில் இருந்து இரண்டு; கொச்சியில் இருந்து ஒன்று என மூன்று புகார்களை சி.பி.ஐ. பெற்றது. இரண்டு புகார்களை மருத்துவ கவுன்சில் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளோம். கொச்சியில் இருந்து பெறப்பட்ட புகார் சி.பி.ஐ. ஆய்வில் உள்ளது'' என்றார்.

மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் ''நீட் தேர்வில் முறைகேடு ஆள்மாறாட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் புகார் ஏதும் பெற்றதா என்பது குறித்து அடுத்த விசாரணையின் போது தெரிவிக்கிறேன்'' என்றார்.


latest tamil newsபெருவிரல் ரேகை அளிக்காத மாணவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ரேகை அளிப்பர் என அவர்கள் சேர்ந்துள்ள கல்லுாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி ''ஏழு மாணவர்கள் தவிர்த்து ஒப்படைக்கப்பட்ட என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்கள் மனுதாரரை விட குறைவான மதிப்பெண் பெற்றனர். இதில் வெளிப்படைத்தன்மை இல்லை'' என்றார்.

இவ்வழக்கில் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலை பதிவாளரை சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்வுக் குழு அனுப்பிய மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்வதாக பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ மாணவர்களின் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்களாகும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் 'அடுத்த ஆண்டில் இருந்து மாணவர்கள் சேர்க்கையின் போது பெருவிரல் ரேகையை ஏன் பெறக் கூடாது' என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் கூறியதாவது: கடந்த முறை நடந்த விசாரணையின் போது டாக்டர்களின் சம்பளத்தை கல்லுாரி ஆசிரியர்களின் சம்பளத்துடன் தான் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தோம்; பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்துடன் ஒப்பிடவில்லை. எந்த பணியையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. 24 மணி நேரம் பணிபுரியும் டாக்டர்கள் போலீசாருக்கும் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். விசாரணையை நவ., 21க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shake-sphere - India,இந்தியா
08-நவ-201919:43:40 IST Report Abuse
 Shake-sphere பக்கத்துக்கு இலைக்கு பாயசம் கேட்கிறான்
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
08-நவ-201919:40:37 IST Report Abuse
karutthu அப்படியே கொஞ்சம் பி எஸ் ஏன் எல் ஊழியர்களையும் கவனித்துக்கொள்ளுங்கள் யுவர் ஹானர்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-நவ-201917:19:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni எந்த அரசு மருத்துவரும் தானிய A க்ளினிக் வைக்கவே கூடாது அதுபோல எந்தபொலீசும் எவனிடமும்கைஎந்தவே கூடாது என்றும் சட்டம்போடுவீங்களா நீதி அரசர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X