உச்சகட்டம்! மஹா.,வில் ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு

Updated : நவ 09, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (7)
Advertisement
Maharashtra,shiv sena,BJP,உச்சகட்டம்,மஹா.,ஜனாதிபதி ஆட்சி,வாய்ப்பு, மஹாராஷ்டிரா,

மும்பை: மஹாராஷ்டிராவில், புதிய அரசு அமையும் விவகாரத்தில், உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. பா.ஜ., மூத்த தலைவர்கள் கவர்னரை சந்தித்ததை அடுத்து, சிவசேனா, எம்.எல்.ஏ.,க்கள், பாதுகாப்பாக சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஆட்சி அமைய, பா.ஜ., சதி செய்வதாக, சிவசேனா கட்சியினர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக, புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடிக்கிறது. 'முதல்வர் பதவியை சுழற்சி முறையில் எங்களுக்கு ஒதுக்க வேண்டும். அமைச்சரவையில், 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும்' என, சிவசேனா தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். இதை, பா.ஜ., தலைவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.


அவகாசம் தேவை:

இதையடுத்து, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, சிவசேனா மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், மஷாராஷ்டிரா அரசியலில், நேற்று உச்சகட்ட குழப்பம் நிலவியது. பா.ஜ., மூத்த தலைவர்களான சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கன்திவார், கிரீஷ் மஹாஜன் உள்ளிட்டோர், நேற்று, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தனர்.

சந்திப்புக்கு பின், அவர்கள் கூறியதாவது: தற்போதுள்ள அரசியல் சூழலில், உடனடியாக புதிய அரசு அமைக்க முடியாது. அதற்கு போதிய அவகாசம் தேவைப்படும். இதனால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி, உடனடியாக கவர்னரிடம் கோர முடியாது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. அடுத்த சில நாட்களில் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, மும்பையில் உள்ள, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் வீட்டில், கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை, உத்தவ் தாக்கரேவுக்கு வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிவசேனா, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்த ஓட்டலுக்கு, சிவசேனா சார்பில், தனியார் பாதுகாவலர்கள், ஓட்டலை சுற்றி பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத் கூறியதாவது: மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்துவதற்காகவே, பா.ஜ., தாமதம் செய்கிறது. கவர்னரை சந்தித்து, அவகாசம் கோரியதன் மூலம், அவர்கள் திட்டம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. 'எங்களால் ஆட்சி அமைக்க முடியாது' என, பா.ஜ., தலைவர்கள் உறுதியாக தெரிவித்து விட்டால், அடுத்ததாக சிவசேனா ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கும். எங்களுக்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.

முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. சிவசேனா, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். அவர்களை மும்பையில் தங்க வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான், ஓட்டலில் தங்க வைத்துள்ளோம்; வேறு எந்த காரணமும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


ஜனாதிபதி ஆட்சி?

மஹாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பம் குறித்து, சட்ட மற்றும் அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: மஹாராஷ்டிர சட்டசபையின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே, நாளை மாலைக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். அதற்கு பின், புதிய அரசு பதவியேற்க, சட்டத்தில் இடமில்லை. தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில், அதிக தொகுதிகள் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., வை ஆட்சி அமைக்கும்படி, கவர்னர் அழைப்பு விடுக்கலாம்.

பெரும்பான்மையை நிரூபிக்க, போதிய அவகாசம் அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. பா.ஜ., தலைவர்கள் இதை விரும்பவில்லை எனில், அடுத்ததாக, இரண்டாவதாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கலாம். சிவசேனாவும் இதை ஏற்க மறுத்தால், இறுதியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


ஆர்.எஸ்.எஸ்., தொடர்பு இல்லை:

மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி கூறியதாவது: மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை தொடர்பு படுத்தி சிலர் கூறுகின்றனர். இந்த விஷயத்துக்கும், மோகன் பாகவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், சிவசேனா ஆதரவுடன் பா.ஜ., அரசு அமைவது உறுதி. மீண்டும், நான் மாநில அரசியலுக்கு திரும்பவுள்ளதாக வெளியான தகவல் தவறானது.


எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

காங்., பொதுச் செயலர் சச்சின் சாவந்த் கூறியதாவது: பா.ஜ.,வின் கூட்டணி கட்சி சிவசேனா. அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம், பதவி கொடுத்து, தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ., திட்டமிடுகிறது. அதனால் தான், சிவசேனா தலைவர்கள், தங்கள், எம்.எல்.ஏ.,க்களை சொகுசு ஓட்டலில் அடைத்து வைத்துள்ளனர். பா.ஜ.,வின் அரசியல் நாகரிகம், இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. பா.ஜ., - சிவசேனா கூட்டணி, ஆட்சி அமைப்பதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

தேசியவாத காங்., மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது: சிவசேனா மட்டுமல்ல; மற்ற எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்களுக்கும், பா.ஜ., தலைவர்கள் வலை விரித்துள்ளனர். எதிர்க்கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பா.ஜ., வலையில் சிக்கி, தங்களுக்கு தேவையானதை பெற்று, பதவிகளை ராஜினாமா செய்யலாம். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும்போது, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
08-நவ-201912:10:11 IST Report Abuse
Harinathan Krishnanandam என்னுடைய கணிப்பும் ஆலோசனையும் நிறைவேறும் போல தோன்றுகிறது
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
08-நவ-201910:53:39 IST Report Abuse
Sitaraman Munisamy பிஜேபி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியாது .அதுவே ஜனாதிபதி ஆட்சியினால் பிஜேபி நினைப்பது மட்டுமே நாடாகும். எனவே கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சி உறுதி.
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-நவ-201910:42:08 IST Report Abuse
vbs manian பி ஜே பி யும் சிவ சீனாவும் பிரிய வேண்டும் என பவார் சோனியா காந்தி விரும்புகிறார்கள். குமாரசாமி ஆட்சி போன்ற ஒன்றை அமைத்து விளையாட போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X