பொது செய்தி

இந்தியா

அயோத்தி தீர்ப்பு: உ.பி.,யில் தற்காலிக சிறைகள் தயார்

Updated : நவ 09, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
ayodhya,verdict,supreme court,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,அயோத்தி தீர்ப்பு,உ.பி.,தற்காலிக சிறை,தயார்

அயோத்தி: அயோத்தி வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை முன்னிட்டு, உ.பி.,யில் எட்டு தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 'நவ., 30ம் தேதி வரை, போலீசார் மற்றும் உயரதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை' என, மாநில அரசு அறிவித்துள்ளது.


எச்சரிக்கை:

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும், 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், அயோத்தி தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அயோத்தியில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, அயோத்தியில், பயங்கரவாத தடுப்பு படை போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் முகாமிட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், அயோத்தி தீர்ப்பு வெளியாகும் போது, அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விரோதிகளை கைது செய்ய, உ.பி., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அம்பேத்கர் மாவட்டத்தில் பல்வேறு கல்லுாரிகளில், எட்டு தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


அவதுாறு:

மாநிலத்தில் உள்ள, 75 மாவட்டங்களிலும், போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு, நவ., 30ம் தேதி வரை, விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மாநில அரசு அறிவித்துள்ளது. சமூக வலை தளங்களில், அவதுாறு மற்றும் வன்முறையை துாண்டும் வகையில், தகவல்கள் வெளியிடுவோரை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவு:

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 'பதற்றம் நிறைந்த பகுதிகளிலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அயோத்தி தீர்ப்பால், எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள, 78 முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீசாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


பணிகளை நிறுத்தியது வி.எச்.பி.,

அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்காக, 1990ம் ஆண்டு முதல், சிற்ப துாண்களை செதுக்கும் பணியில், வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தப் பணியில், நுாற்றுக்கணக்கான கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சிற்ப துாண்கள் செதுக்கும் பணியை, வி.எச்.பி., நிறுத்தியுள்ளது. இது பற்றி, வி.எச்.பி., செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறுகையில், ''அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால், சிற்ப துாண்கள் செதுக்கும் பணியை நிறுத்த, வி.எச்.பி., தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன. கலைஞர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியான பின், பணிகளை எப்போது துவங்குவது என, வி.எச்.பி., தலைவர்கள் முடிவு செய்வர்,'' என்றார்.


பதைபதைப்பில் அயோத்தி மக்கள்

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பில், அயோத்தி மக்கள் உள்ளனர். அயோத்தி வழக்கில், தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், அது, தங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் என, அயோத்தி மக்கள் கருதுகின்றனர். அதனால், பலர், தங்கள் குடும்பத்தினரை, இப்போதே வெளியூருக்கு அனுப்பி விட்டனர். மேலும் சிலர், அத்தியாவசிய பொருட்களை, முன்கூட்டியே வாங்கி சேகரித்து வருகின்றனர். 'அயோத்தி தீர்ப்பு வெளியாகி, சில நாட்களுக்கு பின் தான், எங்களுக்கு நிம்மதி ஏற்படும்' என, அயோத்தி மக்கள் பலரும் தெரிவித்தனர்.


மதிக்க வேண்டும்:

ஜமாயத் உலாமா -ஐ - ஹிந்த் அமைப்பின் தலைவர் அர்ஷ்த் மதானி கூறுகையில், 'அயோத்தி வழக்கில், தீர்ப்பு, முஸ்லிம்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும், தீர்ப்பு எப்படி வந்தாலும், அதை மதித்து, முஸ்லிம்கள் ஏற்க வேண்டும். ஏனெனில், நாடு, சட்டம், மற்றும் உச்ச நீதிமன்றம் நம்முடையது. அதை மதிக்க வேண்டியது நம் கடமை' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.MURUGAN - harweel,ஓமன்
08-நவ-201916:21:52 IST Report Abuse
T.MURUGAN அனைத்தும் அமைதியாக நடப்பதற்கு அந்த ஸ்ரீராமபிரான் அருளாசி வழங்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
08-நவ-201916:18:07 IST Report Abuse
oce இது சாதாரணமான காரியம். எல்லாம் அமைதியாகவே நடக்கும் .ஸ்ரீராம பிரானின் அருள் என்றும் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
08-நவ-201915:41:06 IST Report Abuse
 nicolethomson என்னவோ நடக்கபோகுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X