வருகிறது உள்ளாட்சி தேர்தல்: பழைய ஓட்டு பதிவு அழிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருகிறது உள்ளாட்சி தேர்தல்: பழைய ஓட்டு பதிவு அழிப்பு 

Added : நவ 08, 2019
Share
கோவை:கோவை மாநகராட்சி பகுதியில் பயன்படுத்த உள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள பழைய பதிவு அழிக்கும் பணி நடந்து வருகிறது.தமிழகத்தில் வரும் டிச., மாதம் மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கன்ட்ரோல் யூனிட்டுகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் வணிக வளாக காலி அறைகளில்
 வருகிறது உள்ளாட்சி தேர்தல்: பழைய ஓட்டு பதிவு அழிப்பு 

கோவை:கோவை மாநகராட்சி பகுதியில் பயன்படுத்த உள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள பழைய பதிவு அழிக்கும் பணி நடந்து வருகிறது.தமிழகத்தில் வரும் டிச., மாதம் மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கன்ட்ரோல் யூனிட்டுகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் வணிக வளாக காலி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், கவுன்சிலர் மற்றும் மேயர் என இரு பதவிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதால், இரு மெஷின்கள் வைக்க வேண்டும். வேட்பாளர் எண்ணிக்கை, 16ஐ தாண்டினால் கூடுதல் இயந்திரம் வைக்க வேண்டும்.அதனால், கோவை மாநகராட்சிக்கு, 7,280 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,680 கன்ட்ரோல் யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றை தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில், இயந்திரங்களில் உள்ள பழைய பதிவுகளை அழிக்கும் பணியில், 'பெல்' நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும், நடத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். இயந்திரத்தில் பொருத்தப்படும் 'பேலட் ஷீட்' அச்சடிப்பதற்கான தாள்கள் தருவிக்கப்பட்டுள்ளன' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X