பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறள் சொல்லுங்க பிரியாணி மெல்லுங்க

Added : நவ 08, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
திண்டுக்கல், :நவ.14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று குழந்தைகளின் சிந்தனையை துாண்டும் வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த முஜிப் பிரியாணி கடை புதுமை போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி திருக்குறள் ஒப்பிக்கும் 133 குழந்தைகளுக்கு இலவசமாக அரைபிளேட் பிரியாணி வழங்கப்பட உள்ளது.உரிமையாளர் ேஷக்முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது: ''மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்ற

திண்டுக்கல், :நவ.14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று குழந்தைகளின் சிந்தனையை துாண்டும் வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த முஜிப் பிரியாணி கடை புதுமை போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி திருக்குறள் ஒப்பிக்கும் 133 குழந்தைகளுக்கு இலவசமாக அரைபிளேட் பிரியாணி வழங்கப்பட உள்ளது.

உரிமையாளர் ேஷக்முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது: ''மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்ற தலைப்பில் இளைய தலைமுறையின் சிந்தனைக்கு வித்திடும் வகையில் நவ.14 அன்று 'குழந்தைகள் தின பிரியாணி'யை அறிவித்துள்ளோம். இக்காலத்திற்கேற்ப 5 நிமிடங்களில் 5 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும்.ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரையான மாணவர்களே பங்கேற்கலாம். வெற்றி பெறும் குழந்தைக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும். நடுவர்களாக 5 தமிழாசிரியர்கள் பங்கேற்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால், மாலை 4:00 மணிக்கு மேல்தான் போட்டி நடைபெறும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
08-நவ-201919:38:34 IST Report Abuse
spr வாங்குபவர் இல்லாவிடில், இறைச்சிக்காகக் கொல்பவனும் இல்லை இறைச்சி விற்பவனும் இல்லை இதைத்தான் திருவள்ளுவரும், "தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின், யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்." என்கிறார் அசைவம் சாப்பிட மாட்டோம் என்று சொல்ல நாம் தயாரா? "மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்ற தலைப்பில் இளைய தலைமுறையின் சிந்தனைக்கு வித்திடும் வகையில் இவர் சொன்ன தலைப்பிலேயே ஊன் மறுப்பு குறித்து கூடப் பேசலாமே. "ஒருவனுக்கு ஒருத்தியென்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அதுவும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று என்ற திருக்குறளை மறவாதே" என்று சொன்னவாறே உலகறிய ஒன்றுக்கு மேற்பட்ட மனை, இணை என்று வைத்து வாழ்ந்து பெரிய மனிதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார் அல்லவா? அவருக்கு இவர் எவ்வளவோ மேல்
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
08-நவ-201909:24:47 IST Report Abuse
ரத்தினம் கொல்லாமை , புலான் மறுத்தல் இவைகள் வள்ளுவர் எடுத்து சொன்ன முக்கியமான அறங்கள். நடத்துபவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று? இவர்கள் திருக்குறளை முதலில் படித்தார்களா ? பாய்களுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம்? திருக்குறளை தெருக்குறளாக மாற்றுகிறார்கள் . . இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். காசுக்கு விலை போன ஊடகங்கள் இதைப்பற்றி பேச மாட்டார்கள். எல்லாப்புகழும் திருக்குறளை விற்று பிழைப்பு நடத்திய கட்டு மரத்துக்கே.
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
08-நவ-201909:06:23 IST Report Abuse
Abdul Rahman சுடலை - நல்ல சான்ஸ். எங்கே ட்ரை பண்ணுங்க பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X