8 பிள்ளைகள் பெற்றும் அனாதையான தாய்; ஆதரவுக்கரம் நீட்டிய அரியலூர் போலீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8 பிள்ளைகள் பெற்றும் அனாதையான தாய்; ஆதரவுக்கரம் நீட்டிய அரியலூர் போலீஸ்

Added : நவ 08, 2019 | கருத்துகள் (20)
Share
அரியலுார்: எட்டு பிள்ளைகள் இருந்தும் அனாதையாக விடப்பட்ட மூதாட்டியை அரியலுார் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பாதுகாத்து வருகின்றனர்.அரியலுார் கவரப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சுலோச்சனா 90. இவருக்கு ஐந்து மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். ஜெகநாதன் 40 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.இவரது மூன்று மகன்கள் திருப்பூரிலும்; இரு மகன்கள்
8 பிள்ளைகள் பெற்றும் அனாதையான தாய்; ஆதரவுக்கரம் நீட்டிய அரியலூர் போலீஸ்

அரியலுார்: எட்டு பிள்ளைகள் இருந்தும் அனாதையாக விடப்பட்ட மூதாட்டியை அரியலுார் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பாதுகாத்து வருகின்றனர்.

அரியலுார் கவரப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சுலோச்சனா 90. இவருக்கு ஐந்து மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். ஜெகநாதன் 40 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.இவரது மூன்று மகன்கள் திருப்பூரிலும்; இரு மகன்கள் கவரப்பாளையத்திலும் கூலி வேலை செய்து வருகின்றனர். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி கவரப்பாளையம் சுற்றுவட்ட கிராமத்தில் உள்ளனர்.

சில ஆண்டுகளாக திருப்பூரில் மகன்களுடன் இருந்த சுலோச்சனாவை தீபாவளிக்கு இரண்டு தினம் முன் கவரப் பாளையத்திற்கு அழைத்து சென்றனர். பெற்ற தாயை கவரப்பாளையத்தில் வசிக்கும் இரு மகன்களும் வீட்டில் சேர்க்க மறுத்தனர். இதனால் தெருவில் சுற்றித் திரிந்ததுடன் அதே கிராமத்தில் உள்ள பஸ் நிழற்குடையில் சுலோச்சனா படுத்துகிடந்தார்.

சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதன்பின்னும் தாயை கவனிக்க அவரது மகன்கள் முன்வரவில்லை. இதனால் சமூக ஆர்வலர்கள் சிலர் ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். மீண்டும் கவரப்பாளையம் நிழற்குடையிலேயே சுலேச்சனா தஞ்சமடைந்தார். விபத்தில் ஏற்பட்ட காயங்களால் வேதனைப்பட்டார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. மோகன்தாசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மோகன்தாஸ் அந்த மூதாட்டியை மீட்டு ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து பராமரித்து வருகிறார். மூதாட்டிக்கு தேவையான வசதிகளை டி.எஸ்.பி. மோகன்தாஸ், போலீஸ்காரர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X