எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பாதியில் நின்ற 20 ஆயிரம் வீடுகள் உயிர் பெறும்; கட்டுமான துறை வரவேற்பு

Added : நவ 08, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
மத்திய அரசு, நிதியுதவி,கட்டுமான துறை, வரவேற்பு,

'ரியல் எஸ்டேட்' துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு வழங்க முன்வந்துள்ள நிதி உதவியால், தமிழகத்தில், 20 ஆயிரம் வீடுகள் அடங்கிய, 100 திட்டங்கள் மீண்டும் உயிர் பெறும் என, தெரியவந்துள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதி கிடைக்காமல், பாதியில் நின்று போன கட்டுமான திட்டங்களுக்கு கடன் வழங்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன் வாயிலாக, நாடு முழுவதும், 1,600 திட்டங்களில் முடங்கியுள்ள,4.58 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள், மீண்டும் துவங்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பாதியில் முடங்கிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, அவற்றில், மக்கள் வீடு வாங்க முன்வருவர். இதன் வாயிலாக, ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் அதிகரிக்கும் என,மத்திய அரசு எதிர்பார்க்கிறது. பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் என்ற அடிப்படையில், டில்லி, மும்பை நகரங்களில் முடங்கியுள்ள பெரும்பாலான திட்டங்கள் பயன் பெறும்.தமிழகத்தில், 20 ஆயிரம் வீடுகள் அடங்கிய, 100 கட்டுமான திட்டங்கள், இதில் பயன் பெறும் என, தெரிய வந்துள்ளது.


புத்துயிர் பெறும்:

இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின், தென்னக மைய தலைவர் எஸ்.ராமபிரபு கூறியதாவது:பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு, வங்கிகள், ஏற்கனவே தர ஒப்புக்கொண்ட கடன்கள் கிடைப்பது, பாதியில் தடைபட்டது. அதனால், கட்டுமான பணிகளும் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் முடங்கியது. தற்போது, மத்திய அரசு எடுத்துள்ள முடிவால், தமிழகத்தில் பாதியில் பணிகள் நிறுத்தப்பட்ட, 20 ஆயிரம் வீடுகளுக்கு, புத்துயிர்கிடைக்கும். இத்திட்டங்களில் விற்காமல் உள்ள வீடுகள் விற்கப்படும். கட்டுமான துறை சார்ந்த பிற துறைகளிலும், வர்த்தகம்சூடுபிடிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


வரவேற்பு:

தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: பாதியில் நின்ற திட்டங்களுக்கு, நிதி உதவி வழங்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இதனால், நின்றுபோன கட்டுமான பணிகள், மீண்டும் துவக்கப்படும். இத்திட்டங்களில் வீடுகள் விற்கப்படுவதால், பொருளாதாரம் மேம்படும். இதில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதிலும், வீடு விற்பனையிலும், ஜி.எஸ்.டி., வரி தொடர்பான பிரச்னைகள், இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. இப்பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு முன்வர வேண்டும். வரி விதிப்பு கோணத்தில் ஆராய்ந்தால், இதற்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


பதிவு அவசியம்:

மத்திய அரசு முடிவின்படி, கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி பெற, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்திருப்பது கட்டாயம். இதனால், ரியல் எஸ்டேட் சட்டத்தில் விலக்கு பெற முயன்ற பல நிறுவனங்கள், அதற்கான ஆணையத்தில் பதிவு செய்ய, இனி ஆர்வம் காட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
09-நவ-201920:11:56 IST Report Abuse
Darmavan பில்டர்கள் வீடு வாங்குபவர்களிடம் வாங்கிபணத்துக்கு என்ன கணக்கு..,இந்த திட்டம் ஒரு ஏமாற்று வேலை கேவலம்.
Rate this:
Cancel
Thiyaga Rajan - Chennai,இந்தியா
09-நவ-201912:22:34 IST Report Abuse
Thiyaga Rajan This will help only the real estate companies and there is no use. When no one is ready to buy the flats considering the situation here how the company do the repayment. The government have to build the confident to the working people by increasing by improving the situations to good by adopting some policies. The cost of living here can be reduced by implementing the tax deduction on petrol & Diesels. by collecting corrupted money in the swizz banks, seizing the amounts from the corrupted politicians, institutions & corporate, etc., . There are so many thing to take the actions from the government. But here nothing is happening.. Where are the seized money after raid. Nothing is uncovered by the media / Govt. Again the seized money goes to the corrupted person. The money moves on to the their pockets and not brought out to the peoples benefit. The media simply highlighting actors & actresses personal issues... The govt always penalize the common man.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
08-நவ-201916:03:43 IST Report Abuse
அசோக்ராஜ் இது ஓர் ஊழல் திட்டம் போல் தோன்றுகிறது. மேலும் கடன் கொடுத்து வீடுகள் கட்டி முடிக்கப்பட்டாலும் அவை விலை போகும் என்ற உத்தரவாதம் யாரும் தரமுடியாது. அத்தனை நிதியும் வாராக்கடன்களாக உருமாறி வரி கட்டுபவர் தலையில் விழும்.
Rate this:
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
08-நவ-201922:58:40 IST Report Abuse
Sathiamoorthy.Vவாங்கும் திறன் மக்களிடம் இல்லாத பட்சத்தில் அவர்கள் வீடு கட்டி முடித்து யாருக்கு லாபம் ? அதைவிட விற்காமல் இருக்கும் வீடுகளுக்கு பத்து சதவீதம் முதல் நாற்பது சதவீதம் வரை ஏழை மக்களுக்கு மான்யம் கொடுத்து அதை விற்று பில்டர்கள் சுமைகளையும் வீடு வாங்கும் மக்களின் சுமையையும் குறைக்கலாம் . அரசாங்கத்தை ஏமாற்றுவதற்கு அரசியலில் இருக்கும் புள்ளிகள் பில்டர்களுக்கு ஆதாயம் தருகிறார்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X