பொது செய்தி

இந்தியா

இந்திய விமானப் படைக்கு 300 விமானம் கொள்முதல்

Added : நவ 08, 2019 | கருத்துகள் (5)
Advertisement
இந்திய விமானப் படை,300 விமானம் ,கொள்முதல்

புதுடில்லி, : இந்திய விமானப் படைக்கு, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், 300 விமானங்களை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:விமானப்படையை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன. இதன் ஒரு பகுதியாக, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பொதுத் துறை நிறுவமான, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்' நிறுவனத்திடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிதாக தயாரிக்கப்பட உள்ள விமானங்களில், அதி நவீன தேஜாஸ் விமானங்களும் இடம் பெறும். இந்த விமானங்களை எந்த காலத்துக்குள் தயாரிக்க வேண்டும், எப்போது விமானப் படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கால வரையறைகளும் உருவாக்கப்படவுள்ளன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudhanthiran. - chennai,இந்தியா
08-நவ-201917:35:37 IST Report Abuse
sudhanthiran. மிகத்தவறான முடிவு, தேஜாஸ் விமானம் உலகத்தரத்துக்கு ஈடுகொடுக்காது. பயிற்சிவிமானமாகவே பயன்படுத்தத்தக்கது. டசல்ட் ராபியல், அல்லது சூப்பர் சுகோய் ஏதேனும் ஒன்றையோ, இரண்டு ரகத்திலும் சரிபாதி எண்ணிக்கையோ தேர்ந்தெடுப்பது விமானப்படைக்கு வலுசேர்க்கும். 300 தேஜாஸுக்கு பணத்தை வீணடிப்பது சரியல்ல, தேஜாஸும் சுகோய்யும் ஏறத்தாழ ஒரேவிலைதான்.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
08-நவ-201909:46:47 IST Report Abuse
mohan சீனா அதன் விமானங்களை , தாங்களே தயாரித்து கொள்கின்றன...
Rate this:
Share this comment
Cancel
08-நவ-201909:29:34 IST Report Abuse
ஆப்பு இதைத்தானே ரஃபேல் வாங்கும்போது சொன்னோம்? அன்னிக்கி ஹெச்.ஏ.எல் லுக்கு தரமில்லைன்னுட்டு இன்னிக்கி ஓக்கே யா? ... பேரம் படிஞ்சிருச்சோ? எச்.ஏ.எல்லை குறை சொன்ன சொம்பு பரிவாரங்கள் வரிசையில் வாங்க.
Rate this:
Share this comment
ananthan.iyer - mumbai,இந்தியா
08-நவ-201910:34:28 IST Report Abuse
ananthan.iyerபோலீஸ்க்கு கொடுக்கும் துப்பாக்கிக்கும் ராணுவத்துக்கு கொடுக்கும் துப்பாக்கிக்கும் வித்தியாசம் இருக்கு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X