பொது செய்தி

இந்தியா

பதைபதைப்பில் அயோத்தி மக்கள்

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement
பதைபதைப்பு,  அயோத்திமக்கள்

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பில், அயோத்தி மக்கள் உள்ளனர். அயோத்தி வழக்கில், தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், அது, தங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் என, அயோத்தி மக்கள் கருதுகின்றனர்.அதனால், பலர், தங்கள் குடும்பத்தினரை, இப்போதே வெளியூருக்கு அனுப்பி விட்டனர். மேலும் சிலர், அத்தியாவசிய பொருட்களை, முன்கூட்டியே வாங்கி சேகரித்து வருகின்றனர்.'அயோத்தி தீர்ப்பு வெளியாகி, சில நாட்களுக்கு பின் தான், எங்களுக்கு நிம்மதி ஏற்படும்' என, அயோத்தி மக்கள் பலரும் தெரிவித்தனர்.


latest tamil news

பணிகளை நிறுத்தியது வி.எச்.பி.,அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்காக, 1990ம் ஆண்டு முதல், சிற்ப துாண்களை செதுக்கும் பணியில், வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தப் பணியில், நுாற்றுக்கணக்கான கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சிற்ப துாண்கள் செதுக்கும் பணியை, வி.எச்.பி., நிறுத்தியுள்ளது. இது பற்றி, வி.எச்.பி., செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறுகையில், ''அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால், சிற்ப துாண்கள் செதுக்கும் பணியை நிறுத்த, வி.எச்.பி., தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன. கலைஞர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியான பின், பணிகளை எப்போது துவங்குவது என, வி.எச்.பி., தலைவர்கள் முடிவு செய்வர்,'' என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
09-நவ-201908:55:31 IST Report Abuse
ரத்தினம் எல்லா சிக்கல்களுக்கும் மூல காரணம்னு தேடி பாத்தா, அது காந்தி & நேரு கோஷ்டி சுதந்திரத்தின் போது கையாண்டதில்தான் போய் முடியும். கசப்பா இருந்தாலும் இது தான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
09-நவ-201908:48:57 IST Report Abuse
ரத்தினம் இந்த ஊடகங்கள் கம்முன்னு கெடந்தா போதும். எல்லாம் சாதாரணமாக கடந்து போகும். இவங்க மேதாவி தனமாக, அவங்க பிழைப்பு ஓடணும்னு கூலிக்கு மாரடிக்கிற, தேசத்துக்கு, சமூகத்துக்கு கெடுதல் செய்யிற நாலு பேர கூப்பிட்டு விவாதம் நடத்தி எரியிற தீயிலே எண்ணைய ஊத்தி பெருசாக்குவாங்க.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-நவ-201916:16:28 IST Report Abuse
Endrum Indian சாதரண மக்களுக்கு இதை பற்றி ஒன்றும் கவலை இல்லை???எது வரை??இந்த Organised Crime இல்லாதவரை. எந்த ஒரு தனி மனிதனும் தீர்ப்பை பார்த்து பொங்கி எழுந்து உடனே எதையும் நாசம் செய்வதில்லை இதற்கென்று ஒரு Events மேனேஜர் நியமிக்கப்பட்டு இதில் வரும் எல்லோருக்கும் ரூ 500, ஒரு பிரியாணி பொட்டலம் , ஒரு சரக்கு பாட்டில், ஒரு தண்ணி பாட்டில், சென்று வர ஒரு வான் இவ்வளவு அரேஞ்ச் செய்தததற்குப்பிறகு தான் கூட்டம் சேருகின்றது. நாசம் செய்யச்சொன்னால் நாசம், கூப்பாடு போடச்சொன்னால் கூப்பாடு, கை தட்டச்சொன்னால் கை தட்டல். ஆகவே அந்த பசங்களை உடனே என்கவுன்ட்டர் செய்யுங்கள் அப்படியே இது அடங்கிவிடும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X