இழுபறிக்கு பா.ஜ.,வே காரணம் : சிவசேனா

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (37)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : மகாராஷ்டிராவில் புதிய அரசு ஆட்சி அமைக்க முடியாமல் இருப்பதற்கு பா.ஜ., தான் காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.





மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பா.ஜ., நிர்வாகிகள் சென்று கவர்னரை நேற்று(நவ.,07) சந்தித்து பேசினர். அதே சமயம் சிவசேனாவும் தனது எம்எல்ஏ.,க்களை தனியார் ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் மொபைல்போன்கள் அனுமதிக்கப்படவில்லை. கூட்டத்தில் பேசிய சிவசேனா தலைவர் உத்தரவ் தாக்கரே, பா.ஜ., உடனான உறவை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன் என்ன பேசியதோ அதற்கு ஒப்புக் கொண்டால் பா.ஜ., வுடன் பேச தயார். இனி பா.ஜ., தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.





கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், பா.ஜ.,விடம் 145 எம்எல்ஏ.,க்கள் இருந்தால் ஏன் அவர்கள் ஆட்சி அமைக்கவில்லை? கவர்னர் மாளிகையில் இருந்து ஏன் வெறும் கையுடன் திரும்ப வேண்டும்? தங்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை என பா.ஜ., அறிவிக்கட்டும், அதன் பிறகு நாங்கள் முடிவு எடுப்போம். மக்களுக்காக தான் அரசியலமைப்பு சட்டம். அது பா.ஜ.,வின் தனிப்பட்ட சொத்து அல்ல. நாங்கள் சிவசேனா முதல்வரை சட்டப்படி தேர்வு செய்வோம். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி நிலை தொடர்வதற்கு பா.ஜ.,வே காரணம்.




எங்களுக்கு இருக்கும் பலத்தை அவர்களிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது காட்டுவோம். வாக்காளர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சிவசேனா வழிக்கு பா.ஜ., வர வேண்டும். எங்கள் எம்எல்ஏ.,க்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். இறுதி முடிவை உத்தரவ் தாக்கரே எடுப்பார். மிரட்டல்களும், பயமுறுத்தலும் வேலைக்கு ஆகாது இப்போது. ஆட்சி அமைக்க எங்களிடம் மாற்று வழி உள்ளது. அது பற்றி விவரிக்க முடியாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
08-நவ-201919:13:53 IST Report Abuse
sankaranarayanan சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் - மஹாபாரதத்தில் வரும் சஞ்சய் போல. கிருஷ்ணர், திருதராஷ்டிரனால் பார்க்க முடியாது என்பதற்காக சஞ்சய் என்பருக்கு ஞான-கண் கொடுத்து, நடக்கும் போரை விவரமாக திருதராஷ்டிரனுக்கு எடுத்துறைக்கும்படி கொடுத்தார். அது சண்டை முடியும்வரைதான் அவனால் பார்க்க முடியும். அதுபோல் இந்த சிவசேனா சஞ்சய் - சிவசேனாவினால் - சிவசேநா - பி .ஜெ பி சண்டை முடியும்வரைதான் அறிக்கை விடமுடியும் - - அதற்க்கு பிறகு சஞ்சய் காணாமல் போயிடுவார்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-நவ-201918:17:47 IST Report Abuse
தமிழ்வேல் செய்திப்படிப் பார்த்தால் இது, நம்பிக்கை துரோகம், ஆசைகாட்டி மோசம் பண்ணிட்டானுவோ.. // லோக்சபா தேர்தலுக்கு முன் என்ன பேசியதோ அதற்கு ஒப்புக் கொண்டால் பா.ஜ., வுடன் பேச தயார். இனி பா.ஜ., தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.//
Rate this:
Share this comment
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
08-நவ-201915:08:16 IST Report Abuse
CSCSCS இழுபறிக்கு உங்க கட்சியின் அடாவடிதான் காரணம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X