ரூ.820 கோடி 'போச்சு' : புலம்பும் காங்.,

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (50)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் 5 மாநில சட்டசபை தேர்தலுக்காக காங்., கட்சி ரூ.820 கோடிக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வளவு அதிக அளவில் பணத்தை வாரி இரைத்தும் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டதே என காங்., புலம்பி வருகிறது.latest tamil news


தேர்தல் செலவினங்கள் குறித்த விபரத்தை இந்திய தேர்தல் கமிஷனிடம் காங்., கட்சி அக்.,31 அன்று அளித்துள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின் படி, பிரசாரத்திற்காக ரூ.626.3 கோடியும், வேட்பாளர்களுக்காக சுமார் ரூ.193.9 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடியும் வரை மொத்தம் ரூ.856 கோடி செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.626.36 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.573 கோடி காசோலையாகவும், ரூ.14.33 கோடி ரொக்க பணமாகவும் அளிக்கப்பட்டுள்ளது. ஊடக விளம்பரங்களுக்காக ரூ.356 கோடி செலவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.


latest tamil newsபோஸ்டர் மற்றும் இதர உபகரணங்களுக்காக ரூ.47 கோடியும், பிரசார போக்குவரத்திற்காக ரூ.86.82 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா தேர்தலுக்காக ரூ.40 கோடியும், உ.பி.,க்கு ரூ.36 கோடியும், மகாராஷ்டிராவிற்கு ரூ.18 கோடியும் செலவிட்டுள்ளது. மேற்குவங்கத்திற்கு ரூ.15 கோடியும், ராகுல் போட்டியிட்ட கேரளாவில் ரூ.13 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.


latest tamil news


தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தேசிய கட்சிகளின் லோக்சபா தேர்தல் செலவு விபரத்தின் படி, திரிணாமுல் காங் - ரூ.83.6 கோடி, பகுஜன் சமாஜ் கட்சி - ரூ.55.4 கோடி, தேசியவாத காங்., - ரூ.72.3 கோடி, சிபிஎம் - ரூ.73.1 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக காங்., செலவிட்ட ரூ.516 கோடியை விட 2019 ல் தேர்தலுக்காக செலவிட்டது அதிகமாகும். பா.ஜ., 2014 தேர்தலுக்காக ரூ.714 கோடி செலவிட்டுள்ளது. 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக செலவிட்ட தொகை குறித்த விபரங்களை பா.ஜ., இதுவரை சமர்பிக்கவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
11-நவ-201920:50:34 IST Report Abuse
bal செலவழித்த எல்லாம் எங்கள் பணம்தானே...இவங்க தொழில் என்ன லாபம் சம்பாதிக்க...
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
11-நவ-201919:34:49 IST Report Abuse
Pannadai Pandian no need to be sad as this amount was not brought from Italy i….Vatican will compensate this amount based on her assurance to destroy indian culture.....
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
13-நவ-201912:17:49 IST Report Abuse
Sathya Dhara பணத்தை பற்றி என்ன கவலை....
Rate this:
Share this comment
Cancel
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
10-நவ-201904:49:07 IST Report Abuse
k balakumaran ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை நேரில் இன்று காங்கிரஸ் கட்ச்சியின் தொடர் தோல்விகளில் பார்க்க கூடியதாக உள்ளது. எத்தனை காலம் தான் காந்திஜியின் பெயரை பாவித்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியும். இன்று உங்கள் சாயம் வெளுத்து விட்டது. இந்திய மக்களும் விழித்து கொண்டு விட்டனர். எத்தனை காலம் தான் அவர்களை ஏமாற்ற முடியும்?? இனி வேறு தொழிலுக்கு செல்ல வேண்டியது அல்லது இத்தாலி போன்ற பல நாடுகளில் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்து வெளிநாடு ஒன்றில் குடியேறுவதே உசிதம். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வினாலும் ஈற்றில் தர்மம் தான் வெல்லும் என்பதை உணர்ந்து திருந்துங்கள்
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
13-நவ-201912:20:21 IST Report Abuse
Sathya Dhara போலி வறட்டு மதச்சார்பின்மை கான் கிராஸ் பதவியில் அமர்ந்து கொள்ளை அடிக்க உதவியது. தூ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X