பொது செய்தி

இந்தியா

காவியால் கோயிலாக மாறிய கட்டடம்

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
மாவ்தஹா: உ.பி., மாநிலத்தில் புதிதாக கட்டிய கழிவறை கட்டடத்திற்கு காவி நிற பெயின்ட் அடிக்கப்பட்டதால், கோவில் என நினைத்த மக்கள், பூஜை செய்து சாமி கும்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள மாவ்தஹா கிராமத்தில் அரசு சார்பில் கழிவறை கட்டடம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் பூட்டியே கிடந்த இந்த கட்டடத்திற்கு காவி நிற
Saffron, Color, Temple, UP, PublicToilet, உபி, காவி, கோவில், கழிவறை,

இந்த செய்தியை கேட்க

மாவ்தஹா: உ.பி., மாநிலத்தில் புதிதாக கட்டிய கழிவறை கட்டடத்திற்கு காவி நிற பெயின்ட் அடிக்கப்பட்டதால், கோவில் என நினைத்த மக்கள், பூஜை செய்து சாமி கும்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள மாவ்தஹா கிராமத்தில் அரசு சார்பில் கழிவறை கட்டடம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் பூட்டியே கிடந்த இந்த கட்டடத்திற்கு காவி நிற பெயின்ட் அடிக்கப்பட்டது. புனித நிறமாக கருதப்படும் காவி வர்ணத்தை கண்டதும் அதை கடந்து செல்லும் மக்கள் கோயிலாக நினைத்து வாசலில் நின்று வணங்கி சென்றனர். சிலர், பூட்டியிருந்த கேட்டின் முன் பூஜையிட்டும் சென்றனர்.


latest tamil news


இந்த நிகழ்வுகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது. குழப்பத்தை தவிர்க்க அவர்கள் விரைவாக அந்த கட்டத்திற்கு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிற பெயின்ட் அடித்து அவசரமாக திறந்து வைத்தனர். அதன் பிறகு தான் அது கழிவறை கட்டடம் என மக்களுக்கு தெரியவந்தது. திறந்து வைக்கப்பட்டாலும், இன்னும் கழிவறையை மக்கள் பயன்படுத்தவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-நவ-201914:51:34 IST Report Abuse
ஆரூர் ரங் இதுபோன்ற பழைய கதை .அரசின் தவறால் புதுவையில் நீராதாரத்தைப் பெருக்கிய சுவையான சம்பவமும் உண்டு. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் மந்திரிப் பரிவாரங்களோடு, முத்தரையர் பாளையம் பக்கம் வந்தார்.மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டு, வாசலில் கோலங்கள் போடப்பட்டு, வரிசையாக விளக்கேற்றி, தூப தீபங்கள் ஏற்றி, சாம்பிராணிப் புகை மணங்கமழ வைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்ட கிருஷ்ணதேவராயர், அதனைக் கோயில் என்று எண்ணி, குதிரையில் இருந்து இறங்கி, கரம் குவித்து வணங்கினார். அவருடன் வந்த பரிவாரங்களும் அப்படியே வணங்கின.அதனைக் கண்டு திடுக்கிட்ட அவ்வூர் மக்கள் மன்னரிடம் சென்று வணங்கி, "சக்கரவர்த்திகள், இதுவொரு கோயிலன்று இது ஆயி என்னும் தேவதாசியின் வீடு. மாலை நேரத்தில் இப்படி அலங்கரிப்பது அவளுடைய வழக்கம் என்று சொன்னவுடன், அரசர் வெகுண்டு, ஒரு பாவத்திற்கு ஆளாகிவிட்டோமே என்று கருதி, அதனை இடித்துத் தரைமட்டம் ஆக்குமாறு ஆணையிட்டார்.ஆனால், ஆயி, "சக்கரவர்த்திகளே, இதை இடிக்கும் பணியை நானே ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த இடத்தில் ஒரு கிணறும், ஒரு குளமும் வெட்டி, ஊர் மக்களுக்குக் குடிநீர் வசதி செய்வதற்குத் தங்களிடம் அனுமதி வேண்டுகிறேன்' எனக் கெஞ்சினாள். ராயரும் ஆகட்டும் எனத் தலையசைத்தார். ஆயி வெட்டிய குளத்திற்கு ஆயிகுளம் எனப் பெயர் வழங்கலாயிற்று.இன்றும் அங்கு ஆயிகுளம் உண்டு
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
08-நவ-201913:53:31 IST Report Abuse
Yezdi K Damo கூடிய சீக்கிரம் இந்தியா வல்லரசு ஆகிவிடும் .
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
08-நவ-201915:04:46 IST Report Abuse
Chowkidar NandaIndiaஊமைத்துரை ஆட்சியில் ஊழல் ஊழலாக நடந்து இந்தியா வல்லரசாயிற்றே. அதுபோலவா?...
Rate this:
Cancel
08-நவ-201913:14:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இப்போது புரிகிறதா ? காவி இந்துக்களின் புனித நிறம்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-நவ-201915:06:13 IST Report Abuse
தமிழவேல் அப்போ எதுக்கு அந்த புனித நிறத்த கக்கூசுக்கு அடிக்கனும். ?...
Rate this:
sudhanthiran. - chennai,இந்தியா
08-நவ-201916:35:26 IST Report Abuse
sudhanthiran.பெயிண்டர் கான்க்ராஸ் காரனா இருப்பான்....
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-நவ-201916:43:45 IST Report Abuse
Endrum Indianவெறும் ரெண்டே ரெண்டு நாள் அது மட்டும் வரவில்லையென்றால் பிறகு தெரியும் அது எவ்வளவு புனிதமானது என்று????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X