அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைமை வெற்றிடம்: சூடு கிளப்பும் விவாதம்

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (46)
Share
Advertisement
ரஜினி, தலைமை, வெற்றிடம், துரைமுருகன், திமுக, விவாதம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியதை அடுத்து, அந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி விட்டார் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்துகள் தமிழகத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சென்னையில் கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் பாலசந்தர் சிலை திறப்பு விழாவிற்கு பின்னர், தனது வீட்டில் நடிகர் ரஜினி நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ஒரு நிருபர், தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார், அடுத்த முதல்வராக ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அப்படி இருக்கையில் ஏற்கனவே நீங்கள் கூறியபடி தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இன்னும் இருக்கிறாதா என கேட்டார். அதற்கு ரஜினி பதிலளிக்கையில், தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருக்கிறது என்றார்.


latest tamil news


இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது அறிவியல் விதி. ரஜினி சொல்லிய வெற்றிடத்தை காற்று என்னும் ஸ்டாலின் நிரப்பிவிட்டார். இதை கட்சி ஆரம்பிக்கும் போது அவருக்கு தெரியும், என்றார்.
இதனால், தலைமை வெற்றிடம் என்ற விஷயம் திடீரென தமிழகத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-நவ-201904:48:45 IST Report Abuse
J.V. Iyer துண்டு சீட்டு பேப்பரில் எழுதியதை யார் சரியாக படிக்கிறார்களா அவர்களே தமிழகத்தை ஆள தகுதியானவர்கள். எனவே. தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு தகுதியானபேர்கள் நிறைய இருக்கிறார்கள். .
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-நவ-201902:12:35 IST Report Abuse
Rajagopal தலைமையில் எல்லாம் வெற்றிடம் இல்லை. மக்களின் தலையில்தான் இருக்கிறது. அது மட்டும் வெற்றிடமாக இல்லாதிருந்தால் கழகங்களுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கும் இப்படி மாறி மாறி ஓட்டுப் போட்டுக் கொள்ளையடிக்க விட்டிருக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
08-நவ-201921:50:00 IST Report Abuse
mindum vasantham நான் ரஜினி பக்கம் நிக்குறேன் ஒரு மாற்றம் வரட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X