அயோத்தியில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடு?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடு?

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (3)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : அயோத்தி வழக்கில் விரைவில் தீர்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து தரப்பு ஏற்பாடுகளும் அயோத்தியில் தயார் நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.latest tamil newsசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17 ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார்.
அதற்கு முன் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்த மனு, ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறில்லை என சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்த மனு, ஆர்டிஐ.,யின் கீழ் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகத்தையும் கொண்டு வர வேண்டும் எனக்கோரிய மனு ஆகிய 4 மிக முக்கிய வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. நவ.,13 முதல் நவ.,15 வரையிலான 3 நாட்களில், சமூகம் மற்றும் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய 4 தீர்ப்புகள் வெளியாக உள்ளது.


latest tamil news
உச்சகட்ட பாதுகாப்பு :


தீர்ப்பு வெளியாகும் நாளில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அம்பேத்கார் நகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தர்மசாலாக்கள் அனைத்தும் நவ.,12 க்கு முன் காலி செய்யப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news
வெடிகுண்டு நிபுணர்கள் தயார் :


தீர்ப்பு வெளியாகும் நாளில் பயங்கரவாதிகள் அயோத்தியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால், 30 வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நவ.,10 முதல் மத்திய மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300 பாதுகாப்பு கம்பெனிகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ராம் கோட் செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news
ஹெலிகாப்டர்களும் தயார் :


பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக லக்னோ மற்றும் அயோத்தியில் 2 ஹெகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் உ.பி.,யில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்ட-ஒழுங்கு நிலை குறித்து டில்லியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உ.பி., தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X