பொது செய்தி

இந்தியா

காட்டு மரத்தை தொட்டு வணங்க படையெடுக்கும் மக்கள்

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

போபால்: மரத்தை தொட்டால் நோய்கள் குணமாகும் என ஒருவர் பரப்பிய வதந்தியை நம்பி, லட்சக்கணக்கான மக்கள் காட்டை நோக்கி படையெடுத்ததால் தற்போது அந்த இடம் பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் மாறி உள்ளது.latest tamil newsம.பி.,யின் சாத்பூரா மலைத் தொடரில் அமைந்துள்ள காட்டில் இருக்கும் இலுப்பை மரத்தில் அதிக அளவில் ஆக்சிஜன் வெளியிடப்படுவதால், அந்த மரத்தை தொட்டால் நோய்கள் குணமாகும் என சமீபத்தில் மக்களிடையே வதந்தி பரவியது.
விவசாயி ரூப் சிங் தாக்கூர் என்பவர் பரப்பிய இந்த வதந்தியால் நாள் ஒன்றிற்கு 25,000 முதல் 30,000 பேர் இந்த காட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வந்து சென்றுள்ளனர். இது அதிசய மரம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம் என போலீசாரும், வனத்துறையினரும் தெளிவுபடுத்திய பிறகும் மக்கள் கூட்டம் அலை, அலையாக வந்த வண்ணம் உள்ளது.


latest tamil newsஇதனால் இப்பகுதியில் புதிதாக ஏராளமான பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் முளைத்துள்ளன. சாமி படங்களை போன்று இந்த மரத்தின் புகைப்படங்களும், மரத்தின் புகைப்படம் ஒட்டப்பட்ட மினரல் வாட்டர்களும், ஸ்நாக்ஸ்களும் இப்பகுதியில் விற்கப்பட்டு வருகின்றன.
மக்கள் கூட்டம் அதிகம் வருவதால் இப்பகுதியில் 3 முதல் 5 கி.மீ.,க்கு பிளாஸ்டிக் பைகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகரித்துள்ளன. மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படவும், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsமரத்தை தொட்டால் நோய் தீரும் என்பதால் படுக்கையில் இருக்கும் நோயாளிகளையும் பலர் அங்கு அழைத்து வருகின்றனர். இதனால் இதை வைத்து பணம் சம்பாதிப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-நவ-201921:54:32 IST Report Abuse
A.George Alphonse பக்தி என்ற பேரிலும்,மூடநம்பிக்கையாலும் மக்கள்முட்டாள்களாகவும்,அறிவிலிகளாகவும்,மூடர்களாகவும் நாளுக்கு நாள் மாறி வருகிறார்கள்.இதுவும் அதில் அடங்கும்.இவர்களை ஒருநாளும் திருத்தவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
09-நவ-201909:51:22 IST Report Abuse
ரத்தினம் சமாதிக்குள்ள இருக்கிற கட்டு மரம், எப்போ முரசொலி படிச்சிட்டு தயிர் வடை சாப்பிட்டுச்சு? சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்? மேற்படி செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. உண்மையில் பிரபஞ்சத்தின் மூலமும், விருக்ஷங்களின் மூலமும் நாம் நம்முடைய சக்திகளை செறிவூட்ட முடியும். அதற்கு சில சாதகங்களும், மன ஒருமைப்பாடும் தேவை.. எல்லாமே பொய்யாயிருக்க வாய்ப்பில்லை. மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். திரித்து சொல்லப்பட்டிருக்கலாம். .
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
09-நவ-201906:04:03 IST Report Abuse
B.s. Pillai Trees are God given gift to humanity.It purifies the air and atmosphere by converting the carbon di oxide released by the humans, and the machines d by humans.So it is worth worshipping. Because of mad cutting of trees for personal profits, the seasonal rains failed and there is always drought or flooding due to the imbalance in Nature. Before cutting one tree, one should plant 10 saplings. In Australia, channel 7 broads one and half hour programme on friday 0700PM, beautiful gardens and home. You can not discriminately cut trees which are more than 10 Metre high without specific approval of the council. But in India, even high courts allow the Government (Maharashtra ) to cut indiscriminately 20000 trees in the Aarey colony forest,Mumbai where wild animals live. Now these wild animals area is diminished and it is possible these wild animals can enter into human living areas , thereby danger to live stock and even for human beings.So let us take oath that we will not be going along with those who cut trees who are enemies to us all and to the environment and assist increase in global warming.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X