காட்டு மரத்தை தொட்டு வணங்க படையெடுக்கும் மக்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காட்டு மரத்தை தொட்டு வணங்க படையெடுக்கும் மக்கள்

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (41)
Share

இந்த செய்தியை கேட்க

போபால்: மரத்தை தொட்டால் நோய்கள் குணமாகும் என ஒருவர் பரப்பிய வதந்தியை நம்பி, லட்சக்கணக்கான மக்கள் காட்டை நோக்கி படையெடுத்ததால் தற்போது அந்த இடம் பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் மாறி உள்ளது.latest tamil newsம.பி.,யின் சாத்பூரா மலைத் தொடரில் அமைந்துள்ள காட்டில் இருக்கும் இலுப்பை மரத்தில் அதிக அளவில் ஆக்சிஜன் வெளியிடப்படுவதால், அந்த மரத்தை தொட்டால் நோய்கள் குணமாகும் என சமீபத்தில் மக்களிடையே வதந்தி பரவியது.
விவசாயி ரூப் சிங் தாக்கூர் என்பவர் பரப்பிய இந்த வதந்தியால் நாள் ஒன்றிற்கு 25,000 முதல் 30,000 பேர் இந்த காட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வந்து சென்றுள்ளனர். இது அதிசய மரம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம் என போலீசாரும், வனத்துறையினரும் தெளிவுபடுத்திய பிறகும் மக்கள் கூட்டம் அலை, அலையாக வந்த வண்ணம் உள்ளது.


latest tamil newsஇதனால் இப்பகுதியில் புதிதாக ஏராளமான பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் முளைத்துள்ளன. சாமி படங்களை போன்று இந்த மரத்தின் புகைப்படங்களும், மரத்தின் புகைப்படம் ஒட்டப்பட்ட மினரல் வாட்டர்களும், ஸ்நாக்ஸ்களும் இப்பகுதியில் விற்கப்பட்டு வருகின்றன.
மக்கள் கூட்டம் அதிகம் வருவதால் இப்பகுதியில் 3 முதல் 5 கி.மீ.,க்கு பிளாஸ்டிக் பைகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகரித்துள்ளன. மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படவும், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsமரத்தை தொட்டால் நோய் தீரும் என்பதால் படுக்கையில் இருக்கும் நோயாளிகளையும் பலர் அங்கு அழைத்து வருகின்றனர். இதனால் இதை வைத்து பணம் சம்பாதிப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X