ஆப்பிளை வீழ்த்திய ஆண்ட்ராய்டு

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (2)
Advertisement
iOS, iPhone, Android, Camera, DXOMark, ஐபோன், ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, போன், கேமரா, ஆய்வு

நியூயார்க்: ஸ்மார்ட் போன்களுக்கான பல்வேறு ஆய்வுகளில் முன்னணி தொலைபேசியான ஐபோனை வீழ்த்தி ஆண்ட்ராய்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

DXOMark எனப்படும் ஸ்மார்ட்போன் டிஜிட்டல் கேமரா மதிப்பாய்வு நிறுவனம் சார்பில், ஐபோன்களின் ஐ.ஓ.எஸ்., கொண்ட போன்களுக்கும், ஆண்ட்ராய்டு செயலியை கொண்ட போன்களுக்கும் இடையேயான மதிப்பிடுதலை நடத்தியது.
அதில், உலகின் சிறந்த கேமரா கொண்டதாக கருதப்படும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்ற போன் 117 மதிப்பெண்களை பெற்றது. ஆனால், இதைவிட ஆண்ட்ராய்டு செயலியுடன் இயங்கும் ஹவாய் மேட் 30 ப்ரோ மற்றும் சியோமி மி எக்ஸ்.எக்ஸ்., 9 ப்ரோ பிரீமியம் மொபைல்கள் 121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.




கேமராவில் ஒரு காட்சியை பெரிதுப்படுத்தி பார்க்க ஜூம் செய்யும் திறனில் ஐபோனும், ஆண்ட்ராய்டும், 2 மடங்கு வரையிலான ஜூம் திறனில் சிறப்பாக இருப்பதாகவும், 5 மடங்கு ஆப்டிக்கல் ஜூம் திறனில் ஹவாய் போனை காட்டிலும் ஐபோன் பின்தங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வீடியோ ரெக்கார்டிங்கில் எச்.டி.ஆர் டைனமிக் வரம்பில், ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மற்றும் சியோமி மி சிசி9 போன்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்விரண்டும் 102 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-நவ-201919:43:59 IST Report Abuse
Nallavan Nallavan வேடிக்கை... காமிராவின் திறனுக்கும், இயங்குதளம் வடிவமைக்கப்படுவதிலும் நேரடித் தொடர்பு இல்லை ......
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
08-நவ-201918:25:30 IST Report Abuse
blocked user LEICA உலகின் முன்னணி ஜெர்மன் லென்ஸ் உற்பத்தியாளர் (உதாரணத்துக்கு 0.95X அப்பர்சார் உள்ள ஒரு M லென்ஸ் US$11600). அதை யார் உபயோகித்தாலும் சிறப்பாகவே படம் வரும். ஹுவாவை முன்னால் வர அதுதான் காரணம். மற்றோன்று ஏராளமான மெகா பிக்சலை வைத்து 117 வாங்கி இருக்கிறார்கள். ஆப்பிள் iPhone கிங்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X