கவலை தந்த சிவசேனா- பதவியை உதறினார் பட்னவிஸ்

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
மும்பை: ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களையே சிவசேனா சந்தித்தது என மஹாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் தேவேந்திர பட்னவிஸ் கூறினார். மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ., மற்றும் சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. மாநில சட்டசபை பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா, பா.ஜ., பாஜ, பாரதிய ஜனதா, சிவசேனா, பட்னவிஸ்,தேவேந்திர பட்னவிஸ், உத்தவ் தாக்கரே, முதல்வர் பட்னவிஸ், பட்நாவிஸ், fadnavis, devenda fadnavis, Maharastra, chief minister, resign, govenor, shivsena,

இந்த செய்தியை கேட்க

மும்பை: ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களையே சிவசேனா சந்தித்தது என மஹாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் தேவேந்திர பட்னவிஸ் கூறினார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ., மற்றும் சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. மாநில சட்டசபை பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, கவர்னர் பகத் சிங் கோஷாரியை, முதல்வர் பட்னவிஸ் சந்தித்தார். அப்போது, முதல்வர் பதவியை ராஜினமா செய்து கடிதம் வழங்கினார். இதனை கவர்னர் ஏற்று கொண்டார்.


latest tamil newsபின்னர் பட்னவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மஹாராஷ்டிரா மாநில மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, பிரதமர் மோடி, பாஜ., தலைவர் அமித்ஷா, நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பா.ஜ., அளித்தது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றினோம். ஆட்சி அமைக்க விதித்த கெடு முடிவடைந்துவிட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் துவக்கப்பட்டன.


latest tamil news
பா.ஜ., சிவசேனாவுக்கு தான் மக்கள் ஓட்டளித்தனர். பிரச்னையை தீர்க்க இன்னும் கதவுகள் திறந்தே உள்ளன. உத்தவ்வை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா எங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சந்தித்தது.
கவலை, அதிர்ச்சி


சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது குறித்து சிவசேனாவுடன் ஆலோசனை நடத்தவில்லை. ஆட்சியில் சமபங்கு வழங்குவது குறித்தும் பேசப்படவில்லை. பிரச்னையை தீர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். கடந்த காலங்களில், எங்களை சிவசேனா பல முறை அவமானப்படுத்தியது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நான் பேசியது இல்லை. அக்கட்சியின் நடவடிக்கைகள் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அக்கட்சியின் நடவடிக்கைகள் மூலம் எப்படி ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-நவ-201904:15:46 IST Report Abuse
meenakshisundaram 'சிவா சேனா ' கூடிய சீக்கிரம் உதிர்ந்து விடும் கட்சி
Rate this:
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
09-நவ-201902:09:10 IST Report Abuse
Subramanian Sundararaman 50 பேர் கொண்ட சிவசேனா ஒரு வாரிசு இளைஞனை முதல் அமைச்சராக்க முற்படுவதற்கு பிஜேபி இடம் கொடுக்கக் கூடாது . சிவசேனாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் பல சமரசங்களை செய்ய வேண்டி வரும் . இறுதியில் ஆட்சி எப்படியும் கவிழும் . அதன்பின் தேர்தலை சந்திப்பதைவிட உடனடியாக மீண்டும் தேர்தலை சந்தித்தால் பிஜேபி பற்றிய மதிப்பீடு உயரும் சுமுகமான , ஒற்றை தலைமையில் ஆட்சி அமைய வழிகோலும் . சிவசேனாவுக்கும் பாடம் புகட்ட முடியும் . தேர்தல் செலவுதான். ஆனாலும் நிலையான ஆட்சி மூலம் ஈடு கட்டிவிடலாம் . ஒருவேளை தோற்றாலும் ஆக்கபூர்வமான எதிர் கட்சியாக செயல் படலாம் .சுயநல சந்தர்ப்பவாத வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவது இந்திய அரசியலுக்கு உடனடி தேவை .
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
09-நவ-201901:00:39 IST Report Abuse
Allah Daniel என்ன நம்ம ஒரு சுடலை “இன்னும் 2 டே மாதத்தில் ADMK ஆட்சி கவிழும்”னு லூசு மாதிரி இன்னுமும் இந்த மாதம் எதுவும் ஒளரல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X