இந்த செய்தியை கேட்க
பிரகாசம்: ஆந்திரா மாநிலத்தில் டிக்டாக்கில் மூழ்கிய மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீ பகாலமாக பலரும் தங்களின் இயல்பு வாழ்க்கையை மறந்து சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். இது அவர்களுக்கும் அவர்களை சார்ந்த மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் அந்த மாயையில் சிக்குகின்றனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் டிக்டாக் செயலியால் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தல்லூர் கிராமத்தை சேர்ந்த பாச்சூ, டெய்லராக உள்ளார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் பள்ளி செல்லும் வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

பாத்திமாவுக்கு டிக்டாக்கில் வீடியோ வெளியிடும் பழக்கம் இருந்து வந்தது. வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளி, தோட்டம் என பல்வேறு இடங்களுக்கு சென்று, நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதனை பலமுறை பாச்சூ கண்டித்தும், பாத்திமா கேட்கவில்லை.
ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த பூரிக்கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் மனைவியை கொன்றுள்ளார். மாட்டிக் கொள்வோம் எனக் கருதி, மனைவியை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்தது போல் நாடகமாடினார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டார். பாச்சூ கைது செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE