கான்பூர்: உ.பியில் காதலிக்கு உதவி செய்வதற்காக காதலியுடன் ஓடிய நபரை விசாரணைக்காக பிடித்து வந்த போலீசார் அவரை கட்டிவைத்து பெல்ட்டால் அடிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் போலீசார் ஒரு நபரை தூணில் கட்டிவைத்து லத்தி மற்றும் பெல்ட்டால் சரமாரியாசக தாக்கி உள்ளனர். இதுகுறித்த விசாரணையில், அந்நபர் கூறும்போது, தான் காதலித்த பெண்ணிற்கு உதவி செய்துள்ள காரணத்தால் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரை அடிக்கும் காட்சியை சில போலீசார் வீடியோ எடுத்து ரசித்துள்ளனர். இந்த காட்சி குறித்து அதிர்ச்சியடைந்த கான்பூரின் மூத்த போலீஸ் அதிகாரி பிரதுமான் சிங், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE