கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கழிவறையில் வழுக்கி விழக்கூடாது விஜய்: கோர்ட்

Added : நவ 08, 2019 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை: துப்பாக்கிச்சூட்டில் கைது செய்யப்பட்டுள்ள மாணவரை 3 நாள் காவலில் எடுக்க அனுமதி அளித்துள்ள கோர்ட், அவர் கழிவறையில் வழுக்கி விழாமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியது.காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகேசை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவரது நண்பர் விஜய் கைது செய்யப்பட்டார்.
court, கோர்ட், விஜய், துப்பாக்கிச்சூடு

சென்னை: துப்பாக்கிச்சூட்டில் கைது செய்யப்பட்டுள்ள மாணவரை 3 நாள் காவலில் எடுக்க அனுமதி அளித்துள்ள கோர்ட், அவர் கழிவறையில் வழுக்கி விழாமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகேசை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவரது நண்பர் விஜய் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், விஜயை நவ.,14 வரை(3 நாள்) காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் விஜய் கழிவறையில் வழுக்கி விழாமல், பார்த்துக் கொள்ளும்படி, போலீசாருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.
சமீப காலமாக கைது செய்யப்படும் குற்றவாளிகள் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் போது பலத்த காயங்களுடன் காணப்படுவர். இது போலீசாரின் தனி " கவனிப்பாக" இருக்கும். இதற்கு வழுக்கி விழுந்தததாக காரணம் கூறப்படும். இந்நிலையில் கோர்ட் மறைமுகமாக சாடியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
12-நவ-201916:43:18 IST Report Abuse
Subramanian Arunachalam இந்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர் மீது மிகவும் கருணையுடன் இருப்பதாக தெரிகிறது . இதே கருணையை மற்ற குற்றவாளிகளுக்கும் காட்ட வேண்டும்
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
12-நவ-201910:40:08 IST Report Abuse
Jayvee பேசாமல் நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவரை வைத்தே இது போன்ற குற்றவாளிகளை விசாரிக்க சொல்ல வேண்டியதுதான்.. திருடனும் (இங்கு கொலை குற்றவாளி) safe போலீசும் safe
Rate this:
Cancel
11-நவ-201914:56:06 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை கோல்டன் கிலோப் அல்லது யுவ வீர புரஸ்கார் போன்று ஏதேனும் விருதுக்கு சிபாரிசு செய்யலாமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X