அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
#AyodhyaVerdict,ayodhya,verdict,tomorrow, அயோத்தி, வழக்கு, நாளை, தீர்ப்பு, ராமர்கோயில், ராமஜென்ம பூமி, பாபர் மசூதி

புதுடில்லி: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை (நவ.,9) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்திற்கு 3 அமைப்புகள் உரிமை கொண்டாடிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.


latest tamil newsஇந்நிலையில், நாளை (நவ.,9) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பையொட்டி, உ.பி.,யில் தற்காலிக சிறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில் கொண்டாட்டங்கள் மற்றும் துக்கம் அனுசரிக்கக் தடை விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil newsநாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலர்ட்டாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளது.


உ .பி.,யில் பள்ளிகள் மூடல்தீர்ப்பை முன்னிட்டு உ .பி.,முழுவதும் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். அயோத்தியில் 4 ஆயிரம் துணை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.


பிரதமர் வேண்டுகோள்

தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி என கருதாமல் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - chennai,இந்தியா
08-நவ-201923:22:51 IST Report Abuse
Ram Hopefully , the 2010 Allahabad high court judgment, which said the disputed 22.7 acres should be equally divided among the Sunni Waqf Board, the Nirmohi Akhara and Ram Lalla. வாழ்க பாரதம் , வாழ்க பாரத மக்கள்
Rate this:
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
08-நவ-201922:52:24 IST Report Abuse
C.Elumalai இந்தியா மக்கள்,தீர்ப்பு எப்படியிருப்பினும்,அமைதியை,விரும்புவர்கள்.ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
08-நவ-201922:52:12 IST Report Abuse
மும்பை நாநா அமைதி மற்றும் சன்மார்க்கத்தை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு ‌இந்தியா. நாளை அதை மீண்டும் நிரூபிப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X