சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தேர்வில் நுாதன மோசடி

Added : நவ 08, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
 போலீஸ் தேர்வில் நுாதன மோசடி

சேலம் : காவல் மற்றும் தீயணைப்புத்துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்தற்கு, உடல் தகுதித் தேர்வு, தமிழகத்தில், 15 மையங்களில் நடந்து வருகிறது.

சேலம் மாவட்ட போலீஸ் ஆயுதப்படையில், மூன்றாம் நாளாக நேற்று, போலீஸ் உடற்தகுதி திறன் தேர்வு நடந்தது. அதில், உயரம் அளவிடும் பணியில் நடந்தபோது, திருச்செங்கோட்டைச் சேர்ந்த, தயாநிதி, 23, என்பவர் தேர்வுக்கு வந்தார்.சந்தேகத்துக்கு இடமளிக்கும்படி, அவரது தலை முடி கத்திபோல் நின்றது. இதையடுத்து போலீசார், அவரது தலையை சோதனை செய்தபோது, மூன்று, 'பபுள்காம்'கள், 3 மி.மீ., உயரத்துக்கு இருப்பது தெரிந்தது.

போலீஸ் தேர்வுக்கு குறைந்தபட்ச உயரம், 170 செ.மீ., இதில், 169.8 மி.மீ., இருந்தாலும் ஏற்பர். தயாநிதி உயரம், 165.5 மி.மீ., என்பதால், 3 மி.மீ., உயரத்துக்கு, மூன்று பபுள்காம்களை தலையில் பொருத்தி வந்தது தெரிந்தது. போலீசார், அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினார்.போலி அழைப்பு கடிதம் திருச்சி, ஆயுதப்படை மைதானத்தில், போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, பழனிச்சாமி என்பவர், உடற்தகுதித் தேர்வுக்கு வந்தார். அவர் உடல் அளவீடு மற்றும் 1,500 மீ., ஓட்டத்தில் பங்கேற்று சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில், மற்றொரு நபர் எடுத்து வந்த அழைப்பு கடிதத்திலும், பழனிச்சாமியின் விண்ணப்பத்தில் இருந்த பதிவு எண் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் அவர், பெரம்பலுார், வேல்விழிமங்கலத்தைச் சேர்ந்த சிந்தனை வளவன், 23; பி.இ., பட்டதாரி. போலியாக அழைப்பு கடிதம் தயாரித்து, உடற்தகுதித் தேர்வில் பங்கேற்க வந்தது, தெரிய வந்தது. இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சிந்தனை வளவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மயங்கி விழுந்தவர் பலிகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன். இவரது மகன் கவின்பிரகாஷ், 23; பி.காம்.,-- சி.ஏ., படித்துள்ளார்.சமீபத்தில் நடந்த, இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான தேர்வில், வெற்றி பெற்று, தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வில், கவின்பிரகாஷ் பங்கேற்றார்.சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின், மதியம், 12:25 மணிக்கு, 1,500 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார்.

இதில் தேர்ச்சி பெற்ற நிலையில், ஓட்டம் முடிந்து, மைதானம் அருகே அமர்ந்த போது, திடீரென கவின்பிரகாஷ் மயங்கி விழுந்தார்.அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கவின்பிரகாஷின் கனவு நனவாகும் நிலையில், அவர் உயிரிழந்தது, பெற்றோர் மற்றும் உறவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-நவ-201909:31:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடைசீ எதுலேயெல்லாம் பிராடு என்று வரைமுறையை இல்லியா கண்றாவிகளா லஜம்தான் எல்லாத்துலயும் பிரதானமான இருக்கு தரமில்லாதவன் மெடிகல்படிச்சு டாக்டரானால் கேடு மக்களுக்கு உடல்தகுதியே இல்லாது காவல்துறைக்குப் போனால் இஷ்டத்துக்கு லஞ்சம் வாங்கியே தொப்பை வளர்ப்பானுக தரமில்லாதவன் மந்திரி ஆனால் நாடு நாசமாப்போவும் கேடுகெட்டவனெல்லாம் உயரதவிக்கு வந்தால் நாடு அழிஞ்சுபோயிடும் எவ்ளோ மோடிகள் வந்தாலும் தலை தூக்கவேமுடியாது உன்னால் இந்தியா இந்தியான்னா ஊழல் என்று ஆகிபோச்சுதே
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10-நவ-201901:53:08 IST Report Abuse
 nicolethomson அவர்களை காலை முதல் பட்டினியில் காய வைத்த அந்த ப்பிறவிகளை என்னவென்று சொல்ல? ஒரு உயிரை அநியாயமா கொலை செய்த நபர்களுக்கு பெயர் அதிகாரியா? இதற்க்கு டிபார்ட்மென்ட் அளவில் என்குயரி கிடையாதா?
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
09-நவ-201920:28:41 IST Report Abuse
R KUMAR தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X