சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு

Added : நவ 08, 2019
Share
Advertisement
சத்தியமங்கலம் : கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்ததால், ஆறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கரை உடைந்ததற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், உக்கரம் அருகே, மில்மேடு கிராமம் வழியாக, கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. நேற்று முன்தினம் மாலை,
 கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு

சத்தியமங்கலம் : கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்ததால், ஆறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கரை உடைந்ததற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், உக்கரம் அருகே, மில்மேடு கிராமம் வழியாக, கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. நேற்று முன்தினம் மாலை, சுள்ளித்தோட்டம் பகுதியில், இடது கரையில், திடீரென உடைப்பு ஏற்பட்டது.அப்போது வாய்க்காலில், ௨,௧௦௦ கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. உடைப்பு வழியாக சீறிப்பாய்ந்த வெள்ளம், விவசாய நிலங்களை மூழ்கடித்து, கிராமங்களில் புகுந்தது.மக்கள் தந்த தகவலால், அரை மணி நேரத்தில், வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

வெள்ளப்பெருக்கால், ஆறு கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று வெள்ளநீர், 70 சதவீதம் வடிந்தாலும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன. 1,000 ஏக்கருக்கு மேலான விவசாய பயிர்கள் நாசமாகியுள்ளன.மணல் மூட்டைகளால், வாய்க்கால் கரை உடைப்பை சரி செய்யும் பணியை, நேற்று அதிகாலையே, வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் துவங்கினர்.சத்தி - உக்கரம் சாலையில், நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று காலை, ௧௦:௦௦ மணி வரை, தரைப்பாலத்தை மூழ்கடித்து, வெள்ளம் சென்றதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வெள்ளம் வடிந்த பின், ௧௦:௦௦ மணிக்கு போக்குவரத்து துவங்கியது.இருளில் கிராமங்கள் மேட்டுக்கடை, தட்டாம்புதுார் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்களில், ௩௦௦ வீடுகள் முழுமையாக பாதித்துள்ளன. ௩௦க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததால், இரண்டாவது நாளாக நேற்றும், கிராம மக்கள், மின்சாரமின்றி அவதிப்பட்டனர். கிராமங்கள் இருளில் மூழ்கின. கேத்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியின், இரு பக்க சுற்றுச்சுவர் உடைந்து, வகுப்பறைகளில் வெள்ளம் புகுந்ததால், பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இனி, ௧௧ம் தேதி தான் பள்ளி திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதை துண்டிப்புமேட்டுக்கடையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் சாலை, வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது. கக்கராக்குட்டை புதுார் தரைப்பாலத்தை மூழ்கடித்து, வெள்ளம் சென்றதால், கிராமத்துக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கேத்தம்பாளையம் கிராமத்தில், சுகாதார குழுவினர் முகாமிட்டு, மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:வாய்க்காலில் தண்ணீர் திறந்தால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், அடிக்கடி ஆய்வுக்கு வருவர். அப்போது, கரையின் பலவீனம் கண்டறிந்து பராமரிப்பில் ஈடுபடுவர்.

சில ஆண்டுகளாகவே, எந்த அதிகாரியும் வருவதில்லை. உடைப்பு ஏற்பட்ட பின், இத்தனை அதிகாரிகள், இயந்திரங்களை கொண்டு வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.முன்கூட்டியே பராமரிப்பு செய்திருந்தால், இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு செய்து, 12 ஆண்டுகளாகின்றன. அதன்பிறகு, ஒருமுறை கூட வாய்க்காலின் கரையை கூட, அதிகாரிகள் பார்வையிடவில்லை. பாதிப்பிற்கு, பொதுபணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே முழு காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கீழ்பவானி வாய்க்காலில், திடீரென ஏற்பட்ட உடைப்பு, 50 மீ., அளவுக்குள் இருந்தது. 250 கன அடி வரை நீர் வெளியேறிது. அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், நேற்று மதியம், 3:00 மணிக்கு முழுமையாக நின்றது. உடனடியாக, அவ்விடத்தில் தற்காலிக தீர்வை ஏற்படுத்தி வருகிறோம். பாதிப்புகள் குறித்து, ஆய்வு நடக்கிறது. விரைவில் அனைவருக்கும், உரிய இழப்பீடு கிடைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கதிரவன், ஈரோடு கலெக்டர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X