பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை மீனாட்சி கோவிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்

Updated : நவ 09, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ஹிந்து அறநிலையத் துறை சார்பில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நாள் முழுவதும், இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, நேற்று துவக்கி வைத்தார். திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. அதேபோல், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி கோவிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்

சென்னை : ஹிந்து அறநிலையத் துறை சார்பில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நாள் முழுவதும், இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, நேற்று துவக்கி வைத்தார்.

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. அதேபோல், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நாள் முழுவதும், இலவச லட்டு பிரசாதம் வழங்க, ஹிந்து அறநிலையத் துறை முடிவு செய்தது.அதன்படி, இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை, சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று, துவக்கி வைத்தார். அமைச்சர்கள் ராஜு, உதயகுமார், ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

ரத்தினகிரி பாலமுருகன் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோவில், பீர்க்கன்கரணை சூராத்தம்மன் கோவில் ஆகியவற்றில், 2.06 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் திறந்து வைத்தார்.பணி நியமனம்அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஹிந்து அறநிலையத் துறையில், நிலை மூன்று செயல் அலுவலர் பணிக்கு, 96 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, 'துாய்மை இந்தியா' விருதை, 2017ல் மத்திய அரசு வழங்கியது. நாள்தோறும், 22 ஆயிரம் பேரும், ஆண்டுக்கு, 72 லட்சம் பேரும், இக்கோவிலுக்கு வருகின்றனர். அனைவருக்கும், இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும்.வினய்மதுரை கலெக்டர் தும்பை நல்லெண்ணெய்கடலை மாவு, சர்க்கரை, நெய், முந்திரி, உலர் திராட்சை, கற்கண்டு, ஏலக்காய், கிராம்பு கலவையில், கோவில் சமையல் அறையில், சுகாதாரமான முறையில், தும்பை நல்லெண்ணெயில், ரசாயன வண்ணம் கலக்காமல், லட்டு தயாரிக்கப்படுகிறது.

லட்டு தயாரிக்க, நவீனஇயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. மணிக்கு, 3,000 லட்டுகள் தயாரிக்கலாம். நாள்தோறும், 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படும். ஒரு லட்டின் எடை, 30 கிராம். அம்மனை தரிசித்த பக்தர்களுக்கு, கூடல்குமாரர் சன்னிதியில், லட்டு பிரசாதம் வழங்கப்படும். ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய் வரை செலவாகும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
09-நவ-201910:41:01 IST Report Abuse
LovelyMarees மீனாட்சி கோவில் இல்லை. மீனாட்சி அம்மன் கோவில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X