சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்தா படித்து அலோபதி சிகிச்சை

Added : நவ 08, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாகப்பட்டினம் : நாகை அடுத்த வேளாங்கண்ணியில், சித்த மருத்துவம் படித்த டாக்டர், அலோபதி முறை சிகிச்சை அளித்ததால், மருத்துவ அதிகாரிகள், கிளினிக் மற்றும் பார்மசியை பூட்டி, 'சீல்' வைத்தனர். நாகை மாவட்டம் முழுவதும், பரவலாக வைரஸ் காய்ச்சல் பரவி உள்ள நிலையில், வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு,ஏராளமானவர்கள், பல நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில்,
 சித்தா படித்து அலோபதி சிகிச்சை

நாகப்பட்டினம் : நாகை அடுத்த வேளாங்கண்ணியில், சித்த மருத்துவம் படித்த டாக்டர், அலோபதி முறை சிகிச்சை அளித்ததால், மருத்துவ அதிகாரிகள், கிளினிக் மற்றும் பார்மசியை பூட்டி, 'சீல்' வைத்தனர்.

நாகை மாவட்டம் முழுவதும், பரவலாக வைரஸ் காய்ச்சல் பரவி உள்ள நிலையில், வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு,ஏராளமானவர்கள், பல நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு வந்துள்ளனர்.நோயாளிகள் மேற்கொண்ட சிகிச்சை குறித்து, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அருண்பதி விசாரித்துள்ளார்.நோயாளிகள், தனியார் கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறியதையடுத்து, சந்தேகமடைந்த அவர், மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இணை இயக்குனர் மகேந்திரன் தலைமையிலான டாக்டர்கள், வேளாங்கண்ணியில் செயல்படும் ஆரோக்கிய அன்னை கிளினிக்கில், திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில், சென்னையைச் சேர்ந்த அலோபதி டாக்டர் அந்தோணி என்பவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், நோயாளிகளை பரிசோதனை செய்வதற்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளதும், தற்போது, பி.எஸ்.எம்.எஸ்., படித்துள்ள சித்தா டாக்டர் கீர்த்தனா என்பவரை வைத்து, ஆறு படுக்கை வசதியுடன் அலோபதி சிகிச்சை அளித்ததுடன், பார்மசியும் வைத்திருந்தது தெரிந்தது.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை வெளியேற்றிய மருத்துவ அதிகாரிகள், கிளினிக் மற்றும் பார்மசியை பூட்டி,'சீல்' வைத்தனர்.மேலும், அலோபதி சிகிச்சை மேற்கொண்ட சித்தா டாக்டர் கீர்த்தனா, உரிமம் பெற்ற டாக்டர் அந்தோணிஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க, இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்புக்கு, மருத்துவ அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-நவ-201909:57:01 IST Report Abuse
Bhaskaran தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைய உள்ளனர் அரசு கடும் நடவடிக்கை எடுக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X