சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் உருண்ட தந்தை; பஸ் நிலையத்தில் தவித்த குழந்தை

Updated : நவ 09, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (3)
Advertisement
போதையில் உருண்ட தந்தை; பஸ் நிலையத்தில் தவித்த குழந்தை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், 'குடி' போதையில் இருந்த தந்தை, பஸ் நிலையத்தில் குழந்தையை தவிக்கவிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர், தீபக், 25; அவரது மனைவி சீதாமுனி, 23 ஆகியோர், 2 வயது குழந்தையுடன், வால்பாறையில் தங்கி, தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், இருவரும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வந்துள்ளார். பின், நேற்று மாலை, திடீரென தன் குழந்தையை காணவில்லை என, டாக்டரிடமும், போலீசாரிடம் தீபக் தெரிவித்தார். போலீசார் தேடும் பணியை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, மேற்கு இன்ஸ்பெக்டர் வைரம், பஸ் நிலையத்தில் தனியாக தவித்த குழந்தையை மீட்டு, காப்பகத்தில் சேர்த்துள்ளதாக, கிழக்கு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தை, அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், குழந்தையுடன் கடைக்கு செல்வதாக கூறி சென்ற தீபக், மது அருந்தி, போதையில், குழந்தையை தவற விட்டுள்ளார்.

பின், அரசு மருத்துவமனை வந்து, கழிப்பறைக்குள் சென்று, துாங்கியுள்ளார். போதை தெளிந்த பின், குழந்தையை காணவில்லை எனக் கூறியுள்ளார் என்பது, தெரியவந்தது.போலீசார், தீபக்குக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
12-நவ-201913:09:40 IST Report Abuse
ரத்தினம் எல்லாம் டாஸ்மாக்க்கின் மகிமை.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-நவ-201914:04:26 IST Report Abuse
A.George Alphonse இவனுக்கெல்லாம் குழந்தைகள் ஒரு கேடா.
Rate this:
Share this comment
Cancel
09-நவ-201910:31:54 IST Report Abuse
ராதா இது போல் போதையால் நடைபெறும் அவஸ்தைகளை, விபத்து களை, விபரீதங்களை சம்மந்தப்பட்டவர்களுக்கே ஏன் பத்திரிகைகள் அனுப்பகூடாது. நல்ல Effect இருக்குமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X