பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், 'குடி' போதையில் இருந்த தந்தை, பஸ் நிலையத்தில் குழந்தையை தவிக்கவிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர், தீபக், 25; அவரது மனைவி சீதாமுனி, 23 ஆகியோர், 2 வயது குழந்தையுடன், வால்பாறையில் தங்கி, தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், இருவரும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வந்துள்ளார். பின், நேற்று மாலை, திடீரென தன் குழந்தையை காணவில்லை என, டாக்டரிடமும், போலீசாரிடம் தீபக் தெரிவித்தார். போலீசார் தேடும் பணியை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, மேற்கு இன்ஸ்பெக்டர் வைரம், பஸ் நிலையத்தில் தனியாக தவித்த குழந்தையை மீட்டு, காப்பகத்தில் சேர்த்துள்ளதாக, கிழக்கு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தை, அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், குழந்தையுடன் கடைக்கு செல்வதாக கூறி சென்ற தீபக், மது அருந்தி, போதையில், குழந்தையை தவற விட்டுள்ளார்.
பின், அரசு மருத்துவமனை வந்து, கழிப்பறைக்குள் சென்று, துாங்கியுள்ளார். போதை தெளிந்த பின், குழந்தையை காணவில்லை எனக் கூறியுள்ளார் என்பது, தெரியவந்தது.போலீசார், தீபக்குக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE