பொது செய்தி

தமிழ்நாடு

'எங்கள் ரசிகர்கள் சண்டை போட்டாலும் நானும், ரஜினியும் எப்போதும் நண்பர்களே'

Added : நவ 08, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : ''போட்டி இருந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். எங்கள் ரசிகர்கள் சண்டை போட்டாலும், நாங்கள் ரகசியமாக பேசிக் கொள்வோம்,'' என, நடிகர் கமல் கூறினார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, நடிகர் கமலின் ராஜ்கமல் பட நிறுவன வளாகத்தில், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் உருவச்சிலை திறப்பு விழா, நேற்று நடந்தது. ரஜினி பாணி வேறுஇதில், நடிகர் ரஜினி, கவிஞர் வைரமுத்து உட்பட,
 'எங்கள் ரசிகர்கள் சண்டை போட்டாலும்  நானும், ரஜினியும் எப்போதும் நண்பர்களே'

சென்னை : ''போட்டி இருந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். எங்கள் ரசிகர்கள் சண்டை போட்டாலும், நாங்கள் ரகசியமாக பேசிக் கொள்வோம்,'' என, நடிகர் கமல் கூறினார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, நடிகர் கமலின் ராஜ்கமல் பட நிறுவன வளாகத்தில், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் உருவச்சிலை திறப்பு விழா, நேற்று நடந்தது. ரஜினி பாணி வேறுஇதில், நடிகர் ரஜினி, கவிஞர் வைரமுத்து உட்பட, பலர் பங்கேற்றனர். பாலச்சந்தரின் சிலையை ரஜினியும், கமலும் இணைந்து திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், ரஜினி பேசியதாவது:கமல், அரசியலுக்கு வந்தாலும், கலையை உயிராக மதிப்பவர். தாய் வீடான சினிமாவை, அவர் மறக்க மாட்டார்.

ராஜ்கமல் பட நிறுவனம், இன்னும் பல நடிகர்களை அறிமுகப்படுத்தும். தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே, விக்ரம் படத்தை, எப்படி எடுத்தார் என, நான் வியந்தேன். அதேபோல், அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து விட்டு, அன்று இரவே, அவரது வீட்டுக்கு சென்று, துாங்கிக் கொண்டிருந்த கமலை எழுப்பி பாராட்டினேன். தேவர் மகன் படம் ஒரு காவியம். அப்படத்தை ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், அவரது கலை உணர்வு தெரியும். நான் அடிக்கடி பார்க்கும் படங்கள், காட்பாதர், திருவிளையாடல், ஹேராம். இதில், ஹேராம் படத்தை, 40 முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், ஒருவித அனுபவம் தந்தது.

பாலச்சந்தரின் சிலையை திறந்து வைக்கும் போது, அவருடன் பழகிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. மிகப்பெரிய மகான், இப்போது நம்மிடையே இல்லையே என, எண்ணத் தோன்றுகிறது. 'தமிழ் மட்டும் கற்றுக் கொள்; உன்னை எங்கு கொண்டு போய் உட்கார வைக்கிறேன் பார்' என, சொன்னார். தமிழ் மக்களின் ரசனையை புரிந்து தான், அப்படி சொன்னார். பாலச்சந்தருக்கு பிடித்த நடிகர் கமல். இன்று, அனந்துவின் பிறந்த நாள். அவர், இன்னொரு பாலச்சந்தர்; கமலுக்கு இன்னொரு தந்தை.

பாலச்சந்தரை விட, அனந்துவிடம் தான் கமலுக்கு தொடர்பு அதிகம். இவ்வாறு, ரஜினி பேசினார். கமல் பேசியதாவது:ரஜினிக்கு, 44 ஆண்டுகளுக்கு பின், சாதனையாளர் விருது தருகின்றனர். சினிமாவுக்கு வந்த முதல் ஆண்டிலேயே, சாதனையாளர் ஆனவர் ரஜினி. இவ்விருது தாமதமாக தந்தாலும், தக்க சமயத்தில் கொடுத்து கவுரவித்துள்ளனர். ரஜினி பாணி வேறு; என் பாணி வேறு. இருவரும் நிறைய சிரமங்களை கடந்தே வந்தோம்.ரகசிய ஒப்பந்தம்நாங்கள் இருவரும், வெவ்வேறு பாதையில் பயணிக்க தொடங்கிய போது, ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என, ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம்;

அது, இன்று வரை நீடிக்கிறது. ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வதுடன், விமர்சனமும் செய்து கொள்வோம். எங்களின் முதல் ரசிகரும், விமர்சகரும் நாங்கள் தான்.எங்கள் ரசிகர்கள், ஒருவருக்கொருவர் சண்டைப் போட்டுக் கொள்வர். நாங்கள், தனியாக என்ன பேசிக் கொள்கிறோம் எனக் கேட்டால், வியந்து போவர். நாங்களும், அவர்களை அப்படியே விட்டு வைத்துள்ளோம். இரண்டு, 'கோல் போஸ்ட்' இருந்தால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். நடுவில் சினிமாவை விட்டு, ரஜினி போக நினைத்தார்.

'அதெல்லாம் செய்தால், நடப்பதே வேறு; என்னையும் போகச் சொல்லி விடுவர்' என்றேன். அந்த வகையில், ரஜினி எத்தனை வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும், அதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. விரைவில், ராஜ்கமல் நிறுவனத்தின், 50வது படம் பிரமாண்டமாக வரும். அதில், நான் நடிக்கத் தேவையில்லை.சினிமா துறையில் பொறாமை, அவமரியாதைகள் பல வரும். இத்தனையும் தாண்டி, ரஜினியையும், கமலையும் பிரிக்க முடியவில்லை.

போட்டுக் கொடுப்பவர்களை மீறி, நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். நாங்கள் பேசுகிறோம் என்பது தெரிந்து விட்டதால், போட்டுக் கொடுப்பவர்கள் குறைந்தனர். இவ்வாறு, கமல் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
09-நவ-201918:35:49 IST Report Abuse
mupaco ஐம்பதாவது படத்தில் ரஜினியை நடிக்க வைக்கலாம். ரவிக்குமார், ஷங்கர் போன்றோர் இயக்கலாம். ரஜினியை கைதூக்கி விடும் காட்சியில் விடும்படியான ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கலாம். பணம் அள்ளலாம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-நவ-201910:09:49 IST Report Abuse
Girija நீ பேசாதே வாயத்தொறந்தே.. பாட்டுக்கு சரியான ஆள் ,
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-நவ-201905:58:33 IST Report Abuse
D.Ambujavalli போட்டி இருப்பதால் நடிப்பில் மேன்மேலும் மெருகேற்றி, ரசிகர்களை மகிழ்விக்கலாம். ஆனால் இத்தகைய போட்டியினால் நட்புக்கு எந்த ஊறும் விளையாது கவனமாக இருக்க வேண்டுமெனில், ரசிகர்களின் விமர்சனம், வெறி பற்றிக் கண்டுக்கவே கூடாது சபை நாகரிகம் தெரிந்த பேச்சு ரஜனியுடையது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X