அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மிசா விவகாரத்தில் 2 நாட்களில் பதில்'

Updated : நவ 10, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement
சென்னை: ''மிசா சட்டத்தின் கீழ், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து, சந்தேகம் கிளப்பினேன். இது தொடர்பாக, தி.மு.க., தரப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு, இரண்டு நாட்களில், உரிய சான்றுகளுடன் பதில் அளிக்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, வீரமாமுனிவர் சிலைக்கு, அவரது பிறந்த நாளையொட்டி,
ஸ்டாலின், திமுக, DMK, மிசா, 2 நாட்களில்,பதில், அமைச்சர், பாண்டியராஜன்

சென்னை: ''மிசா சட்டத்தின் கீழ், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து, சந்தேகம் கிளப்பினேன். இது தொடர்பாக, தி.மு.க., தரப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு, இரண்டு நாட்களில், உரிய சான்றுகளுடன் பதில் அளிக்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, வீரமாமுனிவர் சிலைக்கு, அவரது பிறந்த நாளையொட்டி, அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். அதன்பின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: அ.தி.மு.க.,வில், வழிகாட்டி குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும், அறிவிப்பு வெளியாகலாம். உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., ஜகா வாங்குகிறது. நாங்கள் பெரும் வெற்றி பெறுவோம்.

தி.மு.க., கூட்டணி, 'கப்சிப்' என்று உள்ளது. தி.மு.க., பலவீனமாகி விட்டது. பொது வாழ்க்கையில் குற்றச்சாட்டு கூறினால், அதற்கு பதில் கூற வேண்டும். அதற்கு மாறாக, பஞ்சமி நிலம் குறித்து பதில் அளிக்காமல், ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கிறார். குற்றச்சாட்டு உண்மையில்லை என, தி.மு.க., நிரூபிக்க வேண்டும். அதேபோல், மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விபரம், இஸ்மாயில் கமிஷனிலும் இல்லை; ஷா கமிஷனிலும் இல்லை. இரா.செழியன், மிசா கால கொடுமைகள் குறித்து எழுதிய புத்தகத்திலும், இவர் கைது செய்யப்பட்டதற்கான குறிப்பு இல்லை.

என்ன காரணத்திற்காக, அவர் சிறை சென்றார் என்பதை, அவர் தான் கூற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: தி.மு.க., கூறும் ஒவ்வொரு விஷயத்துக்கும், இரண்டு நாட்களில் பதில் அளிக்கப்படும். அனைத்து சான்றுகளுடன் பதில் இருக்கும். அந்த பிரச்னைக்கு முடிவு காண, ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். எனவே, அது குறித்து பேசவில்லை. ஆனால், அவர்கள் கேட்ட கேள்வி களுக்கு, பதில் அளிக்கப்படும்.

மிசாவில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தில், ஸ்டாலின் பெயர் இருந்தால், அதை அவர் காண்பித்திருக்கலாம். அவரது தியாக வரலாற்றில், 23 வயதில், மிசாவில் அடிபட்டார்; ஜனநாயகத்தை காக்க தியாகம் செய்ததாக கூறுகின்றனர். அதில், சில கேள்விகள் எழுந்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
12-நவ-201913:06:22 IST Report Abuse
Ramalingam Shanmugam போலீஸ் ஸ்டேஷன் ஜெயில் ரெகார்ட் இவற்றை புரட்டினால் போதும் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்
Rate this:
Cancel
samy - tamilnadu,இந்தியா
11-நவ-201919:01:30 IST Report Abuse
samy பத்திரிகையாளர் திரு .சோ அவர்கள் நினைவு தான் வருகிறது
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
11-நவ-201910:12:29 IST Report Abuse
மணி பாண்டியனோட அரசியல் வித்தியாசமா இருக்கே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X