பொது செய்தி

இந்தியா

அமைதி காக்கவும்: பிரதமர் மோடி

Updated : நவ 08, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (12)
Advertisement
#AyodhyaVerdictPM,Modi,பிரதமர்,மோடி,twitter

புதுடில்லி: அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை(நவ.,9) வெளியாகும் நிலையில், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில், ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு, நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் மக்கள் அமைதி காக்கும்படி, பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவரது டுவிட்டர் பதிவு:


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நாளை வெளியாகிறது. சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதிலும் உள்ள மக்கள், ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இக்காலகட்டத்தில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அமைதி காட்டியது பாராட்டப்பட வேண்டியது. நீதிமன்ற தீர்ப்புக்குப்பின்னும், நாம் அனைவரும் ஒன்றாக நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது. இம்முடிவு, இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் நிறைந்த நமது பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






யோகி எச்சரிக்கை:


உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், 'வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. சட்டத்தை கையில் எடுக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்' என எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
09-நவ-201910:18:28 IST Report Abuse
kowsik Rishi தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்தியாவின் அமைதிப்புறா ஓடி ஒளியத்தான் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
09-நவ-201910:17:32 IST Report Abuse
kowsik Rishi இஸ்லாம் என்றால் சமாதானம் என்று சொல்லிக்கொண்டு உலக சமாதானத்தையே கெடுத்து மக்களை பயத்தில் விரட்டுபவர்கள்
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-நவ-201909:59:11 IST Report Abuse
தாண்டவக்கோன் எங்கியோ இடிக்கிதே 🤔🤔🤔
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X