பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டண ஏய்ப்பை தவிர்க்க 'ப்ரீபெய்டு மீட்டர்'!

Updated : நவ 10, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
மின் கட்டணம்,ஏய்ப்பு,தவிர்க்க,ப்ரீபெய்டு மீட்டர்

தமிழகம் முழுவதும் விரைவில், 'ப்ரீபெய்டு மின் மீட்டர்' பொருத்தப்பட உள்ளது. மின் கட்டண ஏய்ப்பை தவிர்க்க, அரசு இந்த அதிரடி முடிவை எடுக்க உள்ளது. முதல் கட்டமாக, தொழிற்சாலைகளில், இத்தகைய மீட்டர்களை பொருத்தி, மின் கட்டண வசூலை தீவிரப்படுத்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், வீடுகள்,கடைகள் உள்ளிட்ட மின் இணைப்புகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் உபயோகம் கணக்கெடுக்கப்படுகிறது. கணக்கெடுப்பு நடந்த, 20 நாட்களுக்குள், அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்; தவறினால், மின்சாரம் துண்டிக்கப்படும். அதன்பின், அபராதத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்தினால், மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களும், வீடுகளில் வசிப்போரும், குறித்த காலத்தில், உரிய மின் கட்டணத்தை செலுத்தி விடுகின்றனர்.


அலட்சியம்:


அரசு துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் போன்றவை, மின் கட்டணம் செலுத்துவதில், அலட்சியம் காட்டுகின்றன. மத்திய அரசு, மின் கட்டண வசூலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஆளில்லாமல் கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' மற்றும் செலுத்திய கட்டணத்திற்கு மட்டுமே, மின்சாரம் பயன்படுத்தும், 'ப்ரீபெய்டு மீட்டர்'களை பொருத்த உத்தரவிட்டு உள்ளது.

ப்ரீபெய்டு மீட்டரில், குறிப்பிட்ட அளவு மின்சாரம் மட்டுமே பயன்படுத்தும் வகையில், மென்பொருள் இணைக்கப்படும். அந்த அளவை தாண்டியதும், மின்சாரம் தானாகவே துண்டிக்கப்படும். மீண்டும் மின்சாரம் வேண்டும் என்றால், கட்டணம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில், ப்ரீபெய்டு மீட்டர் பொருத்துவது குறித்து ஆலோசிக்க, கூடுதல் இயக்குனர், ஐந்து தலைமை பொறியாளர்கள் தலைமையில், மின் வாரியம் தனிக்குழு அமைத்தது. இந்தக் குழு, முதல் கட்டமாக, உள்ளாட்சி அமைப்புகளில், 15 இடங்களில், ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணியை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, சோதனை ரீதியாக ஆய்வு செய்தது.


அறிந்து வந்தனர்


தெலுங்கானா மாநிலத்தில், 1,500க்கும் மேற்பட்ட, அரசு கட்டடங்களில், ப்ரீபெய்டு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகளை, தமிழக மின் வாரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அதன் பயன்பாடுகளை அறிந்து வந்தனர். தற்போது, தமிழகத்தில், ப்ரீபெய்டு மீட்டர்கள் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, அரசு கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, நேற்று நாமக்கலில், மின் துறை அமைச்சர் தங்கமணி, நிருபர்களிடம் கூறுகையில், ''ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்துவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. கூடிய விரைவில், ப்ரீபெய்டு மீன் மீட்டர்கள் பொருத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swamy - pondicherry,இந்தியா
09-நவ-201916:34:01 IST Report Abuse
Swamy இது மிகவும் நல்ல திட்டம் ..............ஆனால் இதை அரசு அலுவலகங்களில் இருந்து முதலில் ஆரம்பிக்க வேண்டும் , மேலும் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சலைகளில் இதை அமல்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel
sakthi - Covai,இந்தியா
09-நவ-201913:16:56 IST Report Abuse
sakthi ப்ரீபெய்ட் மீட்டர் வந்தால் டெபாசிட் திரும்பதர வேண்டும் .. மின் வாரியம் இதை முதலில் செய்ய வேண்டும்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
09-நவ-201913:03:20 IST Report Abuse
pattikkaattaan இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடுவதை, மாதம் ஒருமுறை என்று மாற்றவேண்டும்.. மற்ற எல்லாமே மாதத்தவணையாக இருக்கும்போது மின்சாரம் மட்டும் இரண்டு மாதத்திற்க்கு என்று பயன்பாட்டை அதிகரிக்கச்செய்து பின் அதிக தொகை வசூலிக்கிறார்கள்.. மேலும் நாங்கள் செலுத்தியுள்ள டெப்பாசிட் தொகைக்கும் வட்டி சேர்ப்பதில்லை.. காசு கட்டவில்லை உடனடியாக மின் இணைப்பை துண்டிக்கிறார்கள்.. அரசு அலுவலகத்திற்கும் அவ்வாறு துண்டிப்பார்களா ?..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X