மத்திய அரசின் தவறு!

Added : நவ 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மத்திய அரசின் தவறு!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகி விட்டன. நம் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டதற்கு காரணமே, இந்த நடவடிக்கை தான். துவக்கத்திலேயே இதை எதிர்த்தேன். அப்போது என்னை விமர்சித்தனர். இப்போது தான், மத்திய அரசு செய்தது தவறு என, அனைவரும் உணர்கின்றனர்.
மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

புரியலையா?
சர்வதேச பொருளாதார மந்த நிலையால் தான், நம் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார், மம்தா பானர்ஜி. இனியாவது, புரியாத விஷயத்தை பற்றி கருத்து கூறுவதை, அவர் தவிர்க்க வேண்டும்.

சயந்தன் பாசு பொதுச் செயலர், பா.ஜ.,

தவறை உணருங்கள்!
மணிப்பூர், கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வளைத்து, ஆட்சி அமைத்தது. இப்போது, ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தல்களிலும், அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு பிறகாவது, பா.ஜ., தலைவர்கள், தங்கள் தவறை உணர வேண்டும்.
அசோக் கெலாட் ,ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-நவ-201908:11:34 IST Report Abuse
Loganathan Kuttuva கருப்பு பண புழக்கம் வேண்டும் என்று பிற கட்சியினர் விரும்புகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X