கர்தார்பூர் சாலை திட்டம் இன்று துவக்குகிறார் மோடி

Added : நவ 08, 2019
Advertisement
 கர்தார்பூர் சாலை திட்டம் இன்று துவக்குகிறார் மோடி

புதுடில்லி : வரலாற்று சிறப்பு வாய்ந்த கர்தார்பூர் சாலை திட்டத்தை, பிரதமர் மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.

சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடம், அண்டை நாடான பாகிஸ்தானில் கர்தாபூரில் உள்ளது. இங்கு, தர்பார் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய பக்தர்கள், இங்கு செல்வதற்கு வசதியாக, இரு நாடுகளுக்கு இடையே, 4 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பெரும் இடையூறு மற்றும் தடங்கல்களுக்கு இடையில் இந்த திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. பாக்., பிரதமர் இம்ரான் கான், கர்தார்பூரில் நடக்கும் விழாவில், இந்த சாலை திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் இன்று நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, இத்திட்டத்தை, யாத்ரீகர்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். கர்தார்பூரில், சாலை துவங்கும் இடத்தில், யாத்ரீகர் வசதிக்காக, பிரமாண்டமாகவும், அதி நவீன வசதிகளுடனும், புறப்பாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது.

இதையும், பிரதமர் மோடி, இன்று திறந்து வைக்கிறார். இதில், யாத்ரீகர், தற்காலிகமாக தங்குவதற்கான அறைகள், கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன. கட்டணம் வசூல்புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை பயன்படுத்தி, கர்தார்பூருக்கு வரும் ஒவ்வொருவரிடமும், தலா, 1,500 ரூபாய் வசூலிக்கப் போவதாக, பாக்., தெரிவித்திருந்தது. இதற்கு, சீக்கிய பக்தர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, 'துவக்க விழா நாளன்று, கட்டணம் வசூலிக்கப்படாது' என, பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். ஆனாலும், துவக்க விழா அன்றும் கட்டணம் வசூலிக்கப் போவதாக, பாக்., அதிகாரிகள் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. நம் நாட்டிலிருந்து, பாக்., கில் உள்ள குருத்வாராவுக்கு செல்லும் பக்தர்கள், 'விசா' இன்றி பயணிக்க, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும், கட்டணம் வசூல் செய்வது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் சேட்டை!பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள, தர்பார் சாகிப் குருத்வாரா அருகே, பாக்., அரசு சார்பில், ஒரு நினைவுத் துாணும், ஒரு போர்டும் வைக்கப்பட்டுள்ளன. அந்த நினைவுத் துாணின் மேல் பகுதியில், கண்ணாடி கூண்டு அமைத்து, அதற்குள், சிறிய வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள போர்டில், அதுகுறித்த விபரம் எழுதப்பட்டுள்ளது. அதில், 'கடந்த, 1971ல், தர்பார் சாகிப் குருத்வாராவை அடியோடு அழிக்கும் வகையில், இந்திய விமானப் படை, இந்த வெடி குண்டை வீசியது.

இறைவன் அருளால், குருத்வாராவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என, விஷமத்தனமாக எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில், காலிஸ்தான் பயங்கரவாதியான, மறைந்த பிந்தரன்வாலேயின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள், குருத்வாரா அருகே ஒட்டப்பட்டிருந்தன. தற்போது, இந்த சர்ச்சைக்குரிய நினைவுத்துாண் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X