தாய், சகோதரி பிணங்களுடன் 2 மாதம் வசித்த பெண் மீட்பு

Added : நவ 08, 2019
Advertisement

அயோத்தி : உத்தர பிரதேசத்தில், வீட்டில், தாய், சகோதரியின் பிணங்களுடன், இரண்டு மாதங்களுக்கு மேல் வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தியில் வசித்து வந்தவர், விஜேந்திர ஸ்ரீ வத்சவா. துணை கலெக்டராக பணியாற்றிய ஸ்ரீ வத்சவா, 1990ம் ஆண்டு இறந்தார். இதன் பின், இவரது மனைவி புஷ்பா, தன் மகள்கள் ரூபாலி, விபா, தீபா ஆகியோருடன் வசித்து வந்தார்.இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன், ரூபாலி இறந்து விட்டார்.

இதனால், புஷ்பாவும், அவரது மற்ற இரண்டு மகள்களும் மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தகவல்அவர்கள், வீட்டில் இருந்து வெளியே வருவதை நிறுத்தி விட்டனர். அக்கம்பக்கத்தினருடன் பழகுவதையும் நிறுத்தி விட்டனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, புஷ்பா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, தீபா துாங்கிக் கொண்டிருந்தார்.

அவர் அருகில், புஷ்பா மற்றும் விபாவின் உடல்கள், அடையாளம் காண முடியாத அளவில் அழுகி கிடந்தன.இருவரும் இறந்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியிருக்கும் என, போலீசார் தெரிவித்தனர். பரிசோதனைஉடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபாவையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.'தீபாவின் உடல் நிலையைப் பொருத்து, அவரை பெண்கள் காப்பக்கத்தில் சேர்ப்பது பற்றி முடிவு செய்யப்படும்' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X