பொது செய்தி

இந்தியா

சாமியார்கள் போர்வையில் பாகிஸ்தான் உளவாளிகள்

Updated : நவ 10, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சாமியார்கள்,பாகிஸ்தான்,உளவாளிகள், Pakistan, social media, சமூக ஊடகங்கள்

புதுடில்லி : 'பாகிஸ்தான் உளவுத்துறையினர், ஆன்மிக குரு, சாமியார்கள் மற்றும் பெண்கள் போர்வையில், சமூக ஊடகங்களில் உலவுகிறார்கள். 'இது போன்ற, 150 போலி கணக்குகள் மூலம், ராணுவ ரகசியங்களை பெற, தீவிர முயற்சிகள் நடப்பதால், நம் வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


ரகசிய தகவல்கள்:

இந்திய ராணுவத்தின் முக்கிய பிரிவுகளில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களை குறி வைத்து, முக்கிய தகவல்களைப் பெற, பாக்., உளவுத்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பாக்., உளவுத்துறையை சேர்ந்தவர்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிக் டாக், யூ டியூப்' போன்ற சமூக ஊடகங்களில், ஆன்மிக குரு, சாமியார்கள் மற்றும் பெண்கள் போர்வையில், போலி கணக்குகளை துவக்குகின்றனர்.

அதன் மூலம், இந்திய ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நட்பாக பழகி, ஆசை காட்டி மயக்கி, முக்கிய ரகசிய தகவல்களை பெறுகின்றனர். ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள், சமூக ஊடகங்கள் வழியாக, பாக்.,கை சேர்ந்த பெண்ணிடம், சில ரகசிய தகவல்களை பகிர்ந்தது, சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.


எச்சரிக்கை:

இதையடுத்தே, நம் ராணுவம், வீரர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதில், வீரர்கள், சீருடையுடன் உள்ள தங்கள் புகைப்படங்களை, சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், முன் பின் தெரியாத பெண்களிடம், சமூக ஊடகம் வாயிலாக நெருங்கிப் பழக வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 'இது போல, 150 போலி கணக்குகள் உலா வருவதால், நம் வீரர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்' என, ராணுவ தலைமையகம் எச்சரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-201922:10:36 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Not only Army Jawans, all of us need to aware of our friends in social media, if you dont know the person, dont accept. I know many just want say they have too many number of friends in FB.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
09-நவ-201909:21:17 IST Report Abuse
blocked user சோசியல் மீடியா பாலிசி மற்றும் code of conduct ஒன்றை உருவாக்கி சிக்கல்களை வீரர்களுக்கு விளக்குவது அவசியம்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
09-நவ-201908:18:10 IST Report Abuse
spr "இந்திய ராணுவத்தின் முக்கிய பிரிவுகளில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களை குறி வைத்து, முக்கிய தகவல்களைப் பெற, பாக்., உளவுத்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. "இதைத்தானே காங்கிரசும் செய்து தேர்தலுக்கு முன் காங்கிரஸ் ஒரு பாதுகாப்பு வழிமுறை அறிக்கை ஒன்றைத் தயார் செய்து வெளியிட்டது "Lt General DS Hooda (Retd) has submitted a comprehensive strategy document on national security to Congress president Rahul Gandhi. The Congress party had roped in Lt Gen Hooda in February this year to prepare a report. Hooda spoke with DailyO on some of the recommendations in the report — and his views on ‘Armed Forces Special Protection Act’ (AFSPA)." அதனை தயாரிக்க உதவியவர் முன்பு பாகிஸ்தான் மீது அதிரடித் தாக்குதல் நடத்தாத தலைமை ஏற்றவர்தானே அவர் என்ன ரகசியங்களை சொல்லியிருக்கிறாரே அது குறித்து விசாரணை உண்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X