சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வாபஸ்

Updated : நவ 10, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (9+ 33)
Advertisement
SPG,Special Protection Group, சோனியா, ராகுல், பிரியங்கா, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு, வாபஸ்

புதுடில்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை, 'வாபஸ்' பெறுவதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா, தன் பாதுகாவலர்களால், 1984ல் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு, பிரதமரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலைக்குப் பின், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள, வி.ஐ.பி.,க்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து, ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும். அந்த நேரத்தில், புதிய அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருந்தால், பாதுகாப்பை பலப்படுத்துவதும், அச்சுறுத்தல் குறைந்திருந்தால், பாதுகாப்பை வாபஸ் பெறுவதும் வழக்கம். இந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு, சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டு வந்த, 'இஸட் ப்ளஸ்' பாதுகாப்பு, 'இஸட் ஸ்பெஷல்' ஆக உயர்த்தப்பட்டது.

சமீபத்தில் நடந்த, பாதுகாப்பு நிலவரம் குறித்த ஆய்வில், காங்., இடைக்கால தலைவர் சோனியா, லோக்சபா எம்.பி., ராகுல், காங்., பொது செயலர் பிரியங்கா ஆகியோருக்கு, புதிதாக ஏதும் அச்சுறுத்தல்கள் இல்லாததால், அவர்களுக்கான, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக, மத்திய உள்துறை அறிவித்துள்ளது. 'இனி அவர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 'இஸட் ப்ளஸ்' பாதுகாப்பு தொடரும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


பாதுகாப்பை மீறும் சோனியா குடும்பம்:

சோனியா குடும்பத்தினருக்கு, 28 ஆண்டுகளுக்கு பின், சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டதற்கு, காங்., மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், சோனியாவும், அவர் குடும்பத்தினரும், குண்டு துளைக்காத வாகனங்களையோ அல்லது வெளிநாட்டு பயணங்களின் போது சிறப்பு பாதுகாப்பு படையினரை அழைத்துச் செல்வதோ இல்லை என, அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது: காங்., முன்னாள் தலைவர் ராகுல், 2015ம் ஆண்டுக்குப் பின், 2019, மே வரையிலான கால கட்டத்தில், 1,892 முறை, அவர் குண்டு துளைக்காத வாகனங்களை பயன்படுத்தாமல், பயணம் செய்துள்ளார். பல சமயங்களில், பாதுகாப்பு எச்சரிக்கையையும் மீறி, காரின் கூரையில் பயணிப்பது, ராகுலின் வழக்கமாக உள்ளது. கடந்த, 1991ம் ஆண்டு முதல், ராகுல், 156 முறை வெளிநாடு சென்றுள்ளார். இதில், 143 பயணங்களின் போது, சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் உடன் வருவதை தவிர்த்துள்ளார்.

இதே போல, சோனியாவும், 2015 முதல், 2019 வரை, டில்லியில் இருந்து, வெளியில் செல்லும் பயணங்களின் போது, 50க்கும் மேற்பட்ட முறை, குண்டு துளைக்காத வாகனத்தை தவிர்த்துள்ளார். காங்., பொதுச் செயலர் பிரியங்காவும், கடந்த, 1991 முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அதில், 78 வெளிநாட்டு பயணங்களின் போது, சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளை அனுமதிக்க, அவர் மறுத்துவிட்டார்.
கடந்த, 2014ம் ஆண்டு முதல், பல முறை, சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், தன் ரகசியங்களையும், தகவல்களையும் திரட்டி, சிலருக்கு தெரிவிப்பதாக, பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார். ராகுலும், பிரியங்காவும், சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் உடன் வருவதை தவிர்ப்பதற்காக, தங்களின் வெளிநாட்டு பயண விபரங்களை கடைசி நேரத்தில் தெரிவிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
09-நவ-201915:44:29 IST Report Abuse
Endrum Indian எனக்கு இதன் அர்த்தம் இன்று வரை புரியவில்லை?????1 )ஒரு அமைச்சருக்கு பாதுகாப்பு என்றால் 10% ஒத்துக்கொள்ளலாம், அவன் செத்துட்டான்னா அந்த பைலை பார்க்க இன்னொருவர் வரும் வரை அந்த காரியம் தடை படும். ஒரு சாதாரண எம் எல் ஏ, எம் பி செத்தான்னா என்ன ஆகும் ஒன்றும் தடை படாது. அது அவர்கள் கட்சியில் தடை படும் அவ்வளவு தானே?? அப்படி செத்தான்னா 5 வருடத்திற்குள் தேர்தல் வரக்கூடாது 2ல் நிற்கும் நபரை உடனே எம் எல் ஏ, எம் பி ஆக்கினாள் காரியம் முடிந்தது 2) இவர்களின் மிக மிக மிக முக்கிய மிசன் என்ன - ஜன சேவை அப்படியென்றால் ஜனங்கள் அவர்களை கொலை செய்து விடுவார்கள் என்று ஏன் பயம், இல்லை இல்லை எதிர்க்கட்சிகள் கொன்று விடுவார்கள் டூப் எல்லாம் வேண்டாம் 3) பிச்சைக்காரன் எவனும் எம் எல் ஏ எம் பி ஆகவே முடியாது . ஆகவே அவனவன் காசில் அவனுக்கு அவன் பாதுகாப்பு வழங்கிக்கொள்ள உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பணத்தை வரி இறைப்பது அனாவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-நவ-201914:28:48 IST Report Abuse
Nagarajan D இவனுங்களுக்கு கூர்க்கா பாதுகாப்பே அதிகம் இவனுங்களுக்கு SPG எதற்கு? அப்படி தேவை என்றால் இத்தாலிய ராணி சோனியாவிடம் இல்லாதா பணமா சொந்தமாக ஒரு கமாண்டோ அணியை சொந்த செலவில் வைத்து கொள்ளட்டும் சின்ன முதலாளி பப்பு காந்தி எங்கே இருந்தாலும் யாருக்கும் உபயோகமில்லை
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
09-நவ-201910:41:14 IST Report Abuse
வல்வில் ஓரி முன்னூத்தி. எழுவதை தூக்கினது தப்புன்னு போராடுனீங்க .மேலும் .கேரளாவுல அரபி தொகுதி எம் பி..அப்போ தீவிரவாதி எல்லாவனும் ஒங்க பக்கம் தான்.. அப்புறம் யார் கிட்ட இருந்து இவனுங்களை பாதுகாக்க எஸ் பி ஜி வேணுமாம்? ஒரே 🤫 குயப்பமா இருக்கி
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
09-நவ-201916:56:52 IST Report Abuse
Darmavanபாக்கின் தீவிரவாதிகள் எல்லாம் நண்பர்கள் என்னும் போது பாதுகாப்பு ஏன் இந்த குடும்பத்துக்கு.பிரியங்கா என்ன அரசு பதவி ஏன் பாதுகாப்பு./அரசு பங்களா இதை கேட்டு வாங்க வெட்கமில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X