பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது, 'புல் புல்' புயல்

Added : நவ 08, 2019
Advertisement
 மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது, 'புல் புல்' புயல்

கோல்கட்டா : 'வங்கக்கடலில் உருவான, 'புல் புல்' புயல், நாளை அதிகாலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கும், வங்கதேச நாட்டுக்கும் இடையே, அதி தீவிர புயலாக கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக பலத்த மழைவங்கக்கடலில் அந்தமான் அருகே, சமீபத்தில் உருவான காற்றழுத்த பகுதி, புயலாக வலுப் பெற்றது. இதற்கு, அண்டை நாடான பாகிஸ்தான் சார்பில், 'புல் புல்' என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல், படிப்படியாக வலுப்பெற்று, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகர்ந்து, நேற்று அதி தீவிர புயலாக மாறியது. இந்த புயல், மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுக்கும், வங்கதேச நாட்டின் கேபுபரா என்ற பகுதிக்கும் இடையே, நாளை அதிகாலை கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்; மிக பலத்த மழை பெய்யும். மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. மரங்கள் வேருடன் சாயும் ஆபத்தும் உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டும். அனுமதிகோல்கட்டாவிலும், மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். மிக பலத்த மழை பெய்யும். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மேற்கு வங்கத்தில், கடலோர பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்க வேண்டாம். இவ்வாறு, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில், புல் புல் புயலின் தாக்கம் காரணமாக, நேற்று அதிகாலையிலிருந்தே, பலத்த மழை பெய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X