அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் ! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Updated : நவ 09, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (48)
Share
Advertisement
அயோத்தி , தீர்ப்பு,  பாபர் மசூதி, சர்ச்சை நிலம், சுப்ரீம்கோர்ட், பாதுகாப்பு

புதுடில்லி: வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று(நவ.,09) தீர்ப்பளித்தனர். இது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர். அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரி, ஷியா வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடவுள் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் 1992 டிசம்பரில் நடந்த போராட்டத்தின் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2010 செப்டம்பரில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமயைிலான அரசியல் சாசன அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு 1045 பக்கங்கள் கொண்டதாக தீர்ப்பு இருந்தது. தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்; சர்ச்சைக்குரிய நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை முஸ்லிம்கள் உறுதிபட நிரூபிக்கவில்லை என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ஒரு கோயில் இருந்தது. அதன் கட்டுமானம் மசூதியைப் போல இல்லை; கோயிலைப் போல உள்ளது என்ற இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளையை 3,4 மாதத்தில் மத்திய அரசு உருவாக்க வேண்டும்; அந்த அறக்கட்டளையிடம் 2.77 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டதாவது: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும். அதில் ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் லாலா அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும் மீதமுள்ள பகுதி ஹிந்து மத அமைப்பான நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பளிக்கப் பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனஅமர்வு அமைக்கப்பட்டது. ராமஜென்ம பூமி விவகாரத்துக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண மூன்று நிபுணர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைத்தது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர்.

இந்த குழு பல்வேறு தரப்பினருடன் பேசியது. ஆனால் சுமூக தீர்வு காண முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்யஸ்த குழு தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த வழக்கை அன்றாடம் விசாரிக்க முடிவெடுத்து அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தினமும் வழக்கு விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் அக்.,17ல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவ., 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கருதப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.


அயோத்தியில் பலத்த பாதுகாப்பு:

தீர்ப்பு வெளியாக உள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில் 'ட்ரோன்கள்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பாப்டே, நசீர், சந்திரசூட், அசோக்பூஷண் ஆகியோரை கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:


தீர்ப்பு விவரம்


சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டுமொத்தமாக சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது.
அயோத்தி நிலத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் 3 ஆக பிரித்தது தவறு.
1992ல் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம்.
முஸ்லீம்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும்.
வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் மத்திய அரசு தர வேண்டும்.
அயோத்தி நிலம் ஹிந்து அமைப்புக்கே சொந்தம்.
அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் உள்ளது.
நிலத்தை பராமரிப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய திட்டத்தை துவக்க வேண்டும்.
கோவில் கட்ட 3 மாதத்தில் டிரஸ்ட் அமைக்க வேண்டும். தீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்.


பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது ?* வரலாறு மதம் சட்டம் என பலவற்றை அயோத்தி வழக்கு கடந்தது
* ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கை தடுப்பதாக இருக்கக்கூடாது
* இறை நம்பிக்கைக்குள் செல்வது தேவையற்றது
*பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமான ஆதாரம் இல்லை
*மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு
*நிர்மோகி அஹாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. விசாரணைக்கு உகந்தது இல்லை
*அமைதியை காக்கவும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையில் அயோத்தி தீர்ப்பை ஏற்று கொள்ள வேண்டும்
*நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது
*காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை.
*இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன
*12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை கூறுகிறது
*தொல்லியல் துறை ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது

*ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை

*அயோத்தியில், ராமர் பிறந்த இடமாக ஹிந்துக்கள் நம்பிக்கை
*ராமர் தொடர்பான ஹிந்துக்களின் நம்பிக்கை, சர்ச்சைமற்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது
*சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோர முடியும்.


இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
09-நவ-201915:42:02 IST Report Abuse
s.maria alphonse pandian அதவானி அவர்களின் பிறந்த நாள் பரிசாக அமைந்துள்ளது இந்த தீர்ப்பு ....மோடி அவர்களின் காலத்தில்தான் நாட்டில் நிலவும் பல நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வருகின்றன என்பது மனதிற்கு ஆறுதல்..
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
09-நவ-201916:27:11 IST Report Abuse
Darmavanமோடி போன்று தான் நாட்டுக்கு தேவை....
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
09-நவ-201915:18:06 IST Report Abuse
PANDA PANDI எல்லாவற்றையும் அகற்றச்சொன்னாலே தமிழகத்தில் போக்குவரத்து சீரடையும்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
09-நவ-201915:13:43 IST Report Abuse
sankar அக்கா -மம்முதா என்ன சொல்லுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X