சாட்சிகளுக்கு சிதம்பரம் மிரட்டல்; பகீர் குற்றச்சாட்டு

Updated : நவ 10, 2019 | Added : நவ 08, 2019 | கருத்துகள் (28)
Advertisement
சிதம்பரம்,chidambaram,சாட்சி, மிரட்டல், குற்றச்சாட்டு,ஐ.என்.எக்ஸ்., மீடியா

புதுடில்லி: 'பண பரிமாற்ற மோசடி வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் முயற்சிப்பதால், அவருக்கு ஜாமின் வழங்க கூடாது' என, அமலாக்கத்துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

'ஐ.என்.எக்ஸ்., மீடியா' வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பண பரிமாற்ற மோசடி வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சுரேஷ் கய்த் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்க துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: இந்த வழக்கில், மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளோம். அதில் ஒரு சாட்சி, தன் வாக்குமூலத்தை, எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார். மேலும், இருவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் சிதம்பரம் முயற்சிக்கிறார். எனவே, அவருக்கு ஜாமின் வழங்க கூடாது. இவ்வாறு, அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ் கய்த், ஜாமின் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
10-நவ-201914:08:17 IST Report Abuse
Yaro Oruvan வச்சி செய்ரதுன்னு முடிவாயிருச்சி.. வடக்க வச்சி செஞ்சா என்ன தெக்க வச்சி செஞ்சா.. அப்புச்சி உள்ளாற குந்திகினு இருக்குறது மெம்ப பேருக்கு சந்தோசம்.. பூரா ஆளுவளும் சுவீட் எடு கொண்டாடுங்கிறாங்க அப்புச்சி.. ஐ ஆம் சோரி அப்புச்சி
Rate this:
Share this comment
Cancel
Krish - Bengalooru,இந்தியா
09-நவ-201920:10:01 IST Report Abuse
Krish எப்பேர்ப்பட்ட பாரம்பர்யம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர் ,இப்படி பெயரை கெடுத்துக்கொண்டாரே என்று நினைக்கும்போது மிக வருத்தமாய் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-நவ-201915:49:06 IST Report Abuse
Endrum Indian அய்யயோ நான் அப்படி சொல்லவேயில்லை இப்போ எல்லாம் கைதிகள் பாத்ரூமில் வழுக்கி விழுகின்றார்களே அதைப்போலத்தான் நானும் சிரித்துக்கொண்டே உன்னை கொலை செய்து விடுவோம் என்று கூறினேன். இது தப்பா - இப்படிக்கு குதம்பரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X